ஒரே நேரத்தில் இன்று 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது : அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2021

ஒரே நேரத்தில் இன்று 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது : அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

 ஒரே நேரத்தில் இன்று 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் எலெக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள் போன்ற சுய தொழில் புரிவோருக்கு இபதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரே நேரத்தில் சுயதொழில் செய்வோர் அதிக அளவில் பதிவு செய்ய முயன்றதால் இ- பதிவு இணையதளம் முடங்கியது.


இதையடுத்து இ- பதிவு இணையதளம் முடங்கியது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே நேரத்தில் இன்று 60 லட்சம் பேர் இ -பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது.இ - பதிவு இணையதளத்தை சராசரியாக 6 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்த இயலும்.இ - பதிவு இணையதளத்தை அதிகபட்சமாக 12 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் தாங்கும்.6 லட்சம் பேருக்கு பதில் 10 மடங்கு அதிகமாக 60 லட்சம் பேர் இணையத்தை பயன்படுத்த முயன்றதால் இணையதளம் முடங்கியது.முடங்கி உள்ள இ - பதிவு இணையதளம் மாலைக்குள் சீரமைக்கப்படும், என்றார். தொடர்ந்து பேசிய அவர், தி பேமிலி மேன் -2 தொடரை தமிழக அரசு எதிர்க்கிறது என்றும் ஆனால் அதனை தடை செய்ய அதிகாரம் இல்லை என்றும் தி பேமிலி மேன் -2 தொடரை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி