வருமான வரித்துறையின் புதிய வலைத்தளம் இன்று தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2021

வருமான வரித்துறையின் புதிய வலைத்தளம் இன்று தொடக்கம்.

 

வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்காக புதிய வருமான வரித்துறையின் வலைத்தளம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.


நாட்டு மக்கள் அனைவரும் மிக எளிதாக தங்களது வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்காக புதிய வருமான வரித்துறையின் வலைத்தளம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.


வணிகம் தொடர்பான வருமான வரி கணக்குகள், தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல், வருமான வரி கணக்கு தொடர்பான மேல்முறையீடு முதலியவற்றை இதற்கு முன்பு வரை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் பயனர்கள் மிக எளிய முறையில் இதனை மேற்கொள்ள வருமான வரித்துறை புதிய வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

மேலும் புதிய வலைத்தளம் நடைமுறைக்கு வரும் காரணத்தினால் பழைய வலைத்தளம் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை செயல்படாது என்று வருமான வரித்துறை தெரிவித்தது. இந்நிலையில் இன்று (ஜூன் 7) முதல் வருமான வரியினை தாக்கல் செய்வதற்கான புதிய வலைத்தளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய வலைத்தளமான www.incometax.gov.in தளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவங்கள் 1, 2 ஆகியவற்றினை தாக்கல் செய்வதற்கான மென்பொருள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.


அந்த மென்பொருளில் படிவங்களை பூர்த்தி செய்வதறகான வழிமுறைகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் வருமான வரி செலுத்தும் மக்கள் மிகுந்த பயனடைவர் என்றும் வருவமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் 3, 4, 5, 6, 7 ஆகியவற்றினை பூர்த்தி செய்வதற்கான மென்பொருள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் புதிய வலைத்தளம் மூலம் கணக்கு தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கு மீது உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் விவரங்களை புதிய வலைதளத்தின் வாயிலாக பயனர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் வருமான வரி கணக்கு படிவத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய விவரங்கள் அனைத்தையும் வலைத்தளம் முன்கூட்டிய சேமித்து வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி