அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை - kalviseithi

Jun 28, 2021

அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை

ஆந்திரம் மாநிலத்தில் குரூப் -1 பதவிகள் உள்பட அனைத்து அரசுப் பணிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


அரசு வேலைவாய்யப்பு ஆள்சேர்ப்பு பணியில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு முயற்சியின் ஒரு பகுதியாக, 2019 -ஆம் ஆண்டு அக்டோபர் 17 -ஆம் தேதி நடைபெற்ற தேர்வாணைய உயர்மட்டக் கூட்டத்தின் பரிந்துரையின் அடிப்படையில், ஆந்திர அரசு பணியாளர் தேர்வாணையம் அனைத்து அரசு பணிகளுக்கான நேர்முகத் தேர்வுகளையும் ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது. 


இந்த பரிந்துரையின் அடிப்படையில் குரூப்-1 உள்ளிட்ட  அனைத்து அரசுப்பணி தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்து ஆந்திரம் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.


இதன்படி, ஆந்திர மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து அரசுப் பணி தேர்வுகளிலும் இனிமேல் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது. 


தேர்வு நடைமுறையின் மீதான நம்பகத்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்ய நடவடிக்கையாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இனிமேல், விண்ணப்பத்தாரர்களின் எழுத்துத் தேர்வுகளின் தகுதி மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டே பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 comments:

 1. தமிழ்நாட்டில் வெறும் interview மூலம் தேர்வு செய்யப்படும் கல்லூரி உதவி பேராசிரியர்கள் இப்படி சட்டம் இங்கு வந்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

  ReplyDelete
 2. லஞ்சம் பெறுவது குறையும்.நல்ல முடிவு
  வரவேற்க தக்கது.👌👍🙏

  ReplyDelete
 3. யாரு ஐயா நீங்க? இப்படி எப்பவுமே மக்களையே நெனைச்சி இருக்கீங்க! கொஞ்சம் தமிழ்நாடு பக்கம் வந்து இங்க இருக்கற ஆட்சி செய்றவங்கள்கிட்ட கொஞ்சம் சொல்லிட்டு போங்க.....

  ReplyDelete
 4. nalla irunga seniority vendum sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி