இந்தியாவின் பிரதமர் மோடி 12 ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்திருக்கிறார். இதனை வரவேற்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நோய் பரவல் அதிகரித்து வருவதால்.. மாணவர்கள் உயிர் பாதுகாப்பு கருதி எடுத்த நடவடிக்கை சரிதான் என்று வாதிடுகின்றனர்.
ஒரு விஷயத்தை யாருமே கவனிக்கவில்லை.
பிரதமர் மோடி நீட் உட்பட எந்த தேர்வுமே கிடையாது என்று குறிப்பிடவில்லை.
எல்லா கல்லூரி சேர்க்கையும் இந்த ஆண்டு முதல் தேசிய நுழைவுத்தேர்வு அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்தது அரசு.. இது தான் புதிய கல்வி கொள்கையின் முக்கிய ஷரத்து.
பள்ளிக் கல்வி எனும் பதினான்கு ஆண்டுகள் படிக்கும் உழைப்பை குப்பையில் வீசி விட்டு.. நுழைவுத்தேர்வு அடிப்படையில் மட்டுமே கல்லூரி சேர்க்கை என்பது மோசடி..
இதனை நாம் கடுமையாக எதிர்த்து வருகிறோம்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு நீட் உட்பட எந்த நுழைவுத்தேர்வையும் ஏற்கக்கூடாது என்பதே வாக்களித்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.
எனவே நாம் மிகுந்த ஜாக்கிரதையாக இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை அனைத்து பன்னிரண்டு வகுப்பு மாணவர்களும் உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழுக்களை அமைத்து அலகுத்தேர்வுகளை அதன் வழியாக கேள்வித்தாள் அனுப்பி நடத்தும் புதிய நடைமுறையை வெற்றி கரமாக செயல் படுத்தி வருகிறது.
ஏற்கனவே செய்முறை தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டது
இந்த நிலையில் நாம் நமது மருத்துவம் பொறியியல் மற்றும் ஏனைய கல்லூரி சேர்க்கைகளை எப்படி செய்யலாம் என்று தெளிவாக முடிவு எடுக்காமல்..
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அறிவிக்கக் கூடாது.
பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கை பிரச்சனை இது.
கொரானா காலத்தை பயன்பாடுத்தி கொல்லைப்புற வழியாக நுழைவுத்தேர்வு கல்வியை தன் கையில் எடுத்துக்கொள்ள அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடவேண்டாம்.
தேர்வு வேண்டாம் என்றால் மதிப்பெண் முறை மற்றும் கல்லூரி சேர்க்கை முறை இரண்டையும் முடிவெடுத்த பிறகே அறிவிக்க வேண்டும்.
தேர்வு நடத்துவது என்பதும் நடத்தவேண்டாம் என்பதும் மாநில அரசின் உரிமை.
கல்வி தற்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுக்குமான பொது பட்டியலில் உள்ளது.
மாநில பட்டியலில் கல்வியை சேர்ப்பதே நம் பன்முக இந்திய நாட்டின் எதிர்கால ஜனநாயக நலன்களுக்கு ஏற்புடையது.
எனவே மாணவர்கள் நோய் ஆபத்து..நுழைவு தேர்வு கொடுமை இரண்டிலும் இருந்து மீட்க..
ஆன் லைனில் தேர்வு நடத்துவது..உட்பட அனைத்தையும் பரிசீலிப்போம்.
கல்லூரி சேர்க்கை பற்றி முதலில் முடிவெடுப்போம்..
ஆம் ஐயா,
ReplyDeleteதமிழக அரசு இவ்விஷயத்தில் நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பெற்றோர்களும் வருங்கால நலன் கருதி ஒத்துழைக்க வேண்டும். ஒரு மாதம் முன்னதாக தேர்வு நாள் அறிவித்து விட்டு தேர்வுகள் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.