பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மாற்றுப்பணியை இரத்து செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 23, 2021

பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களின் மாற்றுப்பணியை இரத்து செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் அலுவலகங்களில் பணியாற்றிவரும் , மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் , கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் மாற்றுப்பணி ஆணை பெற்று வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். நிருவாக நலன் கருதி அப்பணியாளர்களது மாற்றுப்பணி ஆணை இதன்மூலம் இரத்து செய்யப்படுகிறது.


மேலும் , மாற்றுப்பணியில் பணிபுரியும் பணியாளர்கள் உடன் மாற்றுப்பணியிலிருந்து பணிவிடுவிப்பு பெற்று ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள ( ஊதியம் பெறும் அலுவலகத்தில் ) பணியிடத்தில் மீளப் பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறது. மேற்படி பணியாளர்களை உடன் பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி