பள்ளி திறப்பு குறித்த ஆலோசனை எப்போது? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - kalviseithi

Jun 27, 2021

பள்ளி திறப்பு குறித்த ஆலோசனை எப்போது? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

கொரோனா தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகே, பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆன்லைன் வகுப்பிலேயே சென்றுவிட்டன. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருந்த தமிழக அரசு, இரண்டாம் அலையின் தீவிரத்தால் அந்த முடிவை கைவிட்டது. தற்போது பாதிப்பு குறைந்து இருக்கும் நிலையில் பள்ளிகள் திறக்கப் படுமா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.


தெலுங்கானாவில் ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பிற மாநிலங்களும் இதனை பின்பற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான், ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

முதலில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் படிப்படியாக பிற வகுப்புகளுக்கு தொடங்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில், கொரோனா தொடர்பாக பெற்றோர்களின் அச்சம் குறைந்து பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். முதல்வர் உத்தரவு பிறப்பித்தால் பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 comments:

 1. ஆக எங்கள் தன்மான தலைவர் கோப்பிசெட்டி பாளையத்தாரை மிஞ்சி விடுவீர்கள் போலிருக்கு...ஆகா...

  ReplyDelete
 2. பள்ளிக்கல்வி துறைக்கு சாபம் இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. வேதனை.

  ReplyDelete
 3. News அக்டோபர் 10 ம் தேதியுடையது.

  ReplyDelete
 4. பணியிட மாறுதல் நடத்த வேண்டுகிறேன் ஐயா.

  ReplyDelete
 5. Fast ah school open panni TET pass pannavangalukku posting poduvanga... Marriage pannanum pa. Ipave enakku age 31. So ennai pola Tamil Nadu la evlooo per irupanga... Athanala school open pannalana kuda TET pass pannavangalukku posting podunga pa.. Other works paapom illa...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி