முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்க அரசு வேலையை ராஜினாமா செய்த உடற்கல்வி ஆசிரியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2021

முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்க அரசு வேலையை ராஜினாமா செய்த உடற்கல்வி ஆசிரியர்

 

நாகையில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து அதில் வரும் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.


நாகையை அடுத்துள்ள தெத்தி சமரசம் நகரில் வசித்து வருபவர் புத்தநேசன். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள நெடுங்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனா அவலங்களையும், மக்கள் அல்லல்படும் நிலையையும், உயிரிழப்புகளையும் தொலைக்காட்சிகளில் தனது குடும்பத்தோடு பார்த்த ஆசிரியர் புத்தநேசன் தனது அரசு பணியை ராஜினாமா செய்து அதில் வரும் பிடித்த தொகைகளை முதல்வரின் கொரோனா நிவாரண நிதியாக வழங்க முடிவெடுத்துள்ளார்.


அதனைத்தொடர்ந்து தனது குடும்பத்தோடு நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரை சந்தித்த அவர், ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கல்வித்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மக்கள்படும் இன்னல்களை கண்டு தனது மனைவி கோமதி, மகள் சுவாதியா ஆகியோரின் சம்மதத்தோடும், அரசுக்கு தாங்களும் எதாவது செய்யவேண்டும் என இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அரசு எனது ராஜினாமா கடிதத்தை ஏற்று பிடித்த தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடற்கல்வி ஆசிரியர் புத்தநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில் நாகையில் உடற்கல்வி ஆசிரியர் தனது அரசு வேலையை ராஜினாமா செய்து உதவ முன்வந்து இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 comments:

  1. You are really great sir
    Congratulations sir.
    Nee eppavum happy irukanum
    Nee eppavum nalla irukanum
    God bless you.

    ReplyDelete
  2. ஈடு இணை எதுவும் இல்லை வாழ்க பல்லாண்டு ஃஃஃ

    ReplyDelete
  3. இது கோமாளித்தனம்

    ReplyDelete
  4. முட்டாள்தனம்........லோன் போட்டு கூட கொடுத்திருக்கலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி