தடுப்பூசி கட்டாயம் என சுற்றறிக்கை அனுப்பவில்லை _ பள்ளிக்கல்வி ஆணையர்! - kalviseithi

Jun 7, 2021

தடுப்பூசி கட்டாயம் என சுற்றறிக்கை அனுப்பவில்லை _ பள்ளிக்கல்வி ஆணையர்!

 


பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து அது சர்ச்சையாகியிருக்கிறது.


``தடுப்பூசி கட்டாயம் என்று அரசு நிர்பந்திக்க முடியுமா? விருப்பமுள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்பதுதானே சிறந்த முடிவாக இருக்க முடியும்?” என்று ஆசிரியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.

இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர், ``அதிதீவிரமாகப் பரவி வரும் கொரோனாவை ஒழிப்பதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் ஒரே வழி என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அனைவரும் தங்களது சுய விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் அது தேவையில்லாத சிக்கல்களை உருவாக்காது.


ஆனால், அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், போடாதவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும் என்பதுதான் பதற்றத்தை உருவாக்குகிறது. ஏனெனில், சாதாரண காய்ச்சலுக்காகப் போட்டுக்கொள்ளும் ஊசிக்கே ஒவ்வாமை பிரச்னை உள்ள ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். அப்படியானவர்கள், `கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தங்களுக்கு ஏதாவது ஒவ்வாமை ஏற்படுமோ?' என அச்சமடைகின்றனர்.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரிடம் கேட்டோம், ``எல்லோரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எந்த சுற்றிக்கையும் அனுப்பவில்லை. அதேசமயம் ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்துவிதமான அரசு ஊழியர்களும் பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் அரசு தெரிவிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தளவில் ஒவ்வொரு நாளும் எத்தனை ஆசிரியர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர் என்ற விவரங்கள்தான் சேகரிக்கப்படுகிறதே ஒழிய, யார் தடுப்பூசி போடவில்லை என்ற விவரங்களையெல்லாம் சேகரிக்கவில்லை. தடுப்பூசி விவகாரத்தில் எந்தக் குழப்பமும் வேண்டாம். யார் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். யார் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதனை ஆசிரியர்கள் பின்பற்றினால் போதுமானது. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.” என்றார்.

ஆணையரின் பேட்டியை படிக்க

இங்கே சொடுக்கவும்5 comments:

 1. விருப்பம் இல்லாதவர்களை விட்டுவிடுவது நல்லது
  ஒரு மருந்தை ஒருவர் உடலில் செளுத்திக்ககொள்ள வேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்துவது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது

  ReplyDelete
 2. ஆமாம் இதை நான் முன்மொழிகிறேன்

  ReplyDelete
 3. Sengottaiyan irundhapa vandha kuzhappam innum thodarutha?!
  Aalaalukku oru arikkai...
  Oru uttharavu...
  Aparama nan sollalanu oru arikkai....

  ReplyDelete
 4. இரண்டு குண்டியிலும் ஊசி குத்திவிட வேண்டும்.

  ReplyDelete
 5. கொரோனா தடுப்பூசி பதில் கிடைக்காத கேள்விகள்

  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொற்றில் இருந்து தடுப்பூசி பாதுகாக்கவில்லை, தடுப்பூசி தொற்று பரவலை தடுக்காது தடுப்பூசி போட்டால் உயிருக்கு ஆபத்து இல்லை எனக்கூறுவது நம்பகத்தன்மை இல்லை ஏன் என்றால் தற்போது தொற்று ஏற்பட்டு 99.99%

  மக்கள் நலமுடன் இருக்கிறார்கள், தானாக குணமடைந்தவர்கள் தான் அதிகம் ஆனால் தடுப்பூசி போடச்சொல்லி வற்புறுத்தும் அரசு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளுக்கு அரசு பொருப்பு ஏற்காது, தற்போது போடப்படும் தடுப்பூசி இறுதிக்கட்ட ஆய்வு முடியவில்லை.

  அது மட்டுமா தடுப்பூசி பக்க விளைவுகள் தடுப்பூசி போட்ட அன்றைய நாள் ஏற்படும் பக்க விளைவு மட்டுமே குறிப்பிடப்படுகிறது நீண்டநாள் பக்க விளைவுகள் பற்றி அரசு கவனத்தில் ஏடுப்பது சந்தேகமே, தற்போது போடப்படும் தடுப்பூசி சோதனை தடுப்பூசி தான் இந்த தடுப்பூசியை போட்டபிறகு தடுப்பூசி போட்ட நபர் தனக்கு ஏற்பட்ட நல்ல அல்லது தீய விளைவுகள் அரசிடம் கூறவோ அல்லது தெரிவிக்கவோ அரசு வலைத்தளங்கில் பதிவிடவோ சரியான ஏற்பாடுகள் இல்லை, சொல்லப்போனால் இந்தமாதிரியான ஏற்பாடுகள் இருப்பது கண்கட்டி வித்தையாக உள்ளது. அரசுக்கு தடுப்பூசியை மக்களிடம் செலுத்துவதில்தான் கவனம் உள்ளது கேள்விகளுக்கு பதில் இல்லை. அரசு ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது, தடுப்பூசி கட்டாயம் இல்லை என்று கூறிவிட்டு மறைமுகமாக கட்டாயப்படுத்துவது என்பது ஆதார் கட்டாயம் இல்லை என்று கூறிவிட்டு படிப்படியாக ஒவ்வொரு துறை வாரியாக கட்டாயபடுத்தி தற்போது ஆதார் இல்லாமல் எந்த தொழில் வேலை அரசு உதவி இதுபோன்ற பல விஷயங்கள் சாத்தியம் மிக அரிது அரசின் இதுபோன்ற செயல்கள் சந்தேகம் அளிப்பதாக உள்ளது.

  சோதனை தடுப்பூசியை மக்களிடம் செலுத்திய பிறகு பக்கவிளைவுகள் தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தர முன்வராத அரசு

  தடுப்பூசிகளை மேம்படுத்த தடுப்பூசியை செலுத்திய பிறகு தடுப்பூசி செலுத்திய மக்களிடம் சோதனை செய்ய தடுப்பூசிபோட்ட நபர் தனக்கு ஏற்பட்ட நல்ல அல்லது தீய விளைவுகள் அரசிடம் கூறவோ அல்லது தெரிவிக்கவோ அரசு வலைத்தளங்கில் பதிவிடவோ சரியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி