அரசுப்பள்ளிகளை நோக்கி குவியும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் அறிக்கை. - kalviseithi

Jun 29, 2021

அரசுப்பள்ளிகளை நோக்கி குவியும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் அறிக்கை.

 

அரசுப்பள்ளிகளை நோக்கி குவியும் தனியார் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.


    தமிழ்நாடு அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக தனியார்பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்சி மாணவர்கள் அரசுப்பள்ளிகளை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். பெற்றோர்கள் மத்தியில் அரசுப்பள்ளிகளின் மீது ஏற்பட்டுள்ளத் தாக்கம் வரவேற்புக்குரியது.


  கடந்தகாலங்களில் தனியர் பள்ளிகளின் மீதிருந்தமோகம் படிப்படியாகக் குறைந்து அரசுப்பள்ளிகளின் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் தாக்கத்தின் எதிரொலியாகப் பல தனியார் மூடும் சூழல் உருவாகியுள்ளது. ஏழை எளியமக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டி வணிகநோக்கத்தில் செயல்பட்டவந்தப் பள்ளிகள் அடையாளத்தை இழந்து நிற்கின்றது.இது ஒருவகையில்  கொரோனாவும் பெரும்மாற்றத்தை மட்டுமல்ல விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.தனியர் பள்ளி நிறுவனர்களின் சங்கங்களே எங்களின் பள்ளிகளை மூடிவிடுகின்றோம் என்றநிலையினை உருவாக்கியுள்ளது என்றால் அதுமிகையில்லை.


   மேலும் அரசின் அதிரடி நடவடிக்கையாக அரசுப்பள்ளிகளில் சேர. எட்டாம் வகுப்புவரை மாற்றுச்சான்றிதழ் தேவையில்லை என்ற அறிவிப்பு பெற்றோர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும் தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்து 9 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் தர பெருந்தொகைக் கேட்டு நச்சரிக்கிறார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்துத் தவிக்கும் பெற்றோர்களின் அபயக்குரல் வருத்தமளிக்கிறது. ஆகையால்   அப்பள்ளிகள்  EMIS எண்ணை Common pool போடாவிட்டாலும்


 அரசு 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்   ஆதார் அட்டை மூலம் EMIS எண்ணை எடுக்கும் வகையில் மாற்றியமைத்து உதவிடும்படி மாண்புமிகு. முதல்வர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்  பணிவுடன் வேண்டுகிறேன்.


 பி.கே.இளமாறன்


மாநிலத்தலைவர்


தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்


98845 86716

3 comments:

  1. Very happy to hear👌🏻👌🏻👌🏻👌🏻

    ReplyDelete
  2. அரசு பள்ளியின் மேல் உள்ள மோகம் இல்லை, கொரோனாவின் கொடுமை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. தனியார் நிறுவன ஊழியர்களின் திண்டாட்டம் யாரும் பொருட்படுத்தவில்லை. எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிட்டது. அரசு பள்ளி ஆசிரியர்கள் அரசுக்கு நிதி கொடுக்கிறார்கள். நம்மை போன்ற்றவர்கள் தனியார் துறையில் இருக்கிறார்கள் அவர்களுக்கு எதாவது செய்யுங்கள் என்று அரசிடம் சொல்லவில்லை. சொந்த காரியம் சிந்தாபாத்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி