Flash News : தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2021

Flash News : தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு நீட்டிப்பு.


தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.

பள்ளி , கல்லூரி,  பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு மட்டும் அனுமதி.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன்கூடிய  முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த முழு ஊரடங்கு 14-ந்தேதி முடிகிறது. அதற்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க செய்யலாமா? அல்லது விலக்கி கொள்ளலாமா? என்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கொரோனா நிலவரம் மற்றும் அதிகாரிகள் வழங்கிய பரிந்துரைகளை ஆராயந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து அறிவித்துள்ளார்.

27 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சலூன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


1 comment:

  1. நம் தமிழகத்தை இரண்டாக பிரித்து

    இரண்டு முதல்வர்கள், துணை முதல்வர்கள்,

    அமைச்சர்கள்,
    துணை அமைச்சர்கள்

    எம்எல்ஏக்கள்,
    துணை எம்எல்ஏக்கள்

    கலெக்டர்கள்,
    துணை கலெக்டர்கள்

    ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகள்,
    துணை ஐபிஎஸ், ஐஏஸ், அதிகாரிகள்,

    மாவட்ட செயலாளர்கள், துணை மாவட்ட செயலாளர்கள்,

    வட்டச் செயலாளர்கள், துணை வட்ட செயலாளர்கள்....

    மேயர்கள்,துணை மேயர்கள்,

    கவுன்சிலர்கள், துணை கவுன்சிலர்கள்,

    இப்படி இரண்டு அடுக்குகளாக பதவிகளில் ஆட்களை நிரப்பி தமிழகத்தில் பசுமையாக, செழுமையாக, வளமாக, வேகமான வளர்ச்சிக்கு பணியாற்ற இந்த வழி உதவும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி