TET தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வேலை?- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி - kalviseithi

Jun 3, 2021

TET தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வேலை?- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

 

2013 , 2017 , 2018 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்ற பலரும் பணிக்குக் காத்திருப்பதாகவும் பள்ளி திறக்கப்படும் நேரத்தில் இதுகுறித்துப் பரிசீலனை செய்து உரிய நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:


“மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யத் தெரிந்த பிரதமர் மோடி, ஏன் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளதுடன், கல்லூரிகளில் சேரும் அனைவருக்கும் கரோனா காலத்தைப் பயன்படுத்தி தேசிய நுழைவுத் தேர்வைக் கொண்டு முயற்சியாக இது உள்ளதாக சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார். பிளஸ் 2 தேர்வு விவகாரத்தில் அனைத்துக் கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டு, இறுதி முடிவை முதல்வர் எடுப்பார்.


ஏற்கெனவே 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் அளிப்பது என்று குழு அமைத்து கருத்துக் கேட்டு வருகிறோம்.
இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கும் சரியாக மதிப்பீடு செய்து மதிப்பெண் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆனால், எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை.


ஏனெனில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், கல்வி அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் பெரும்பாலானோர் பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என்றுதான் கருத்துத் தெரிவித்திருந்தனர்.


முதல்வர் அறிவுறுத்தியபடி மாணவர்களின் எதிர்காலம் எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல் அவர்களது உடல் நலனும் முக்கியம். எனவே, அதைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும்.


மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுப்பிய கடிதத்தில்கூடத் தேர்வுகளை எப்படி நடத்தலாம் என்றுதான் கருத்து கேட்கப்பட்டிருந்ததே தவிர, தேர்வை ரத்து செய்வது குறித்து கருத்து கேட்கவும் இல்லை- கூறவும் இல்லை. ஆனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.


2013, 2017, 2018 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பலரும் பணிக்குக் காத்திருக்கின்றனர். பள்ளி திறக்கப்படும் நேரத்தில் இதுகுறித்துப் பரிசீலனை செய்து உரிய நல்ல முடிவு எடுக்கப்படும்".


இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிளஸ் 2 தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாரே என்ற கேள்விக்கு, “ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.


தோழமைக் கட்சியினர் கூறும் கருத்துகளை முதல்வர் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். இறுதி முடிவை முதல்வர் எடுப்பார்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

91 comments:

 1. Thank you sir. Consider all tet passed candidates sir plz...

  ReplyDelete
  Replies
  1. Pass செய்த எல்லாருக்கும் வேலை கொடுக்க முடியுமா?
   அதிக மார்க்குக்குதான் வேலை.

   Delete
 2. No... பரிசிலினை... direct ha posting poduga sir... 7yrs ha ipo poduvan.. intha varathulaa poduvaanuu katu katu... nothuu poitomm sir... negalachumm poduga sir...

  ReplyDelete
  Replies
  1. Sir we passed 2017. We too completed our cv. Pls give good solution for all Tet passed candidates. We all hope your good solution Sir.

   Delete
  2. you were going cv process when?

   Delete
  3. you were going cv process when?

   Delete
  4. In 2018 paper2 completed cv (2017 batch)

   Delete
 3. Antha tet exam pathi oru clear ha oru solution matum soluga sir... starting la irunthuu ipoo varikum... clear ha onum solaamaa exam matumm conduct pandragaa...

  ReplyDelete
 4. Sir we have passed TET in 2013 and working in private schools for less salary only. Last two years that alo we wont get properly. Kindly consider the age factor also please

  ReplyDelete
 5. மாண்புமிகு ஐயா வணக்கம்

  2013 ல் TET தேர்வில் (92marks)தேர்ச்சி பெற்றுள்ளேன். தற்போது வயது35 கடந்தவிட்டது. TET PASS + Employment seniority அடிப்படையில் பணி நியமனம் செய் வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 6. 2013 tet exam passing plz posting sir plz

  ReplyDelete
 7. Relaxation mark also considered.that is 82 above?

  ReplyDelete
 8. காசு கொடுத்து தான் வேலை தம்பி

  ReplyDelete
 9. 2013 la CV mudisi 10 years wait panravangallam sombaingala??? Yaaru first mudisangaloa avangalukku first posting podanum ..

  ReplyDelete
  Replies
  1. Apdilam poda mudiyathu ellaraum kalnthu than posting

   Delete
  2. Life Time kuduthutangale aparam enna 1st preference?

   Delete
  3. Athan life time validity koduthutangale.inimay 2013ku munnurimaiyellam kekathinga.tet mark+employment seniority this is best

   Delete
  4. 2013Ku mattum adutha 40 varusam posting podanum mathavanga athai vedikai parkanuma?neenga mattum than tamilnatula porantha mathiry pesuringa

   Delete
  5. Dmk very super govt nice govt

   Delete
  6. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி+வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு= பணி நியமனம்

   Delete
  7. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி+வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு= பணி நியமனம்

   Delete
 10. Tet mark+employment seniority is very best method. For all passed year students

  ReplyDelete
 11. 10 வருடமாக நிரப்பாமல் உள்ள தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புக

  ReplyDelete
 12. Ulakame accept panrathu.. first vandavanukku that munnurimanu solranga..ithula mattum illa nu solrathu tha 10 years kondu vandhurichi...itha accept panrathutha darmam..niyayam..illiyina onnum yethana varusam aaanalum itha theerkka mudiyathu..

  ReplyDelete
  Replies
  1. Ungaluku 10000+ posting pottangala ippo 2017 batchku podattum apram munnurimai kelunga

   Delete
  2. 10000 post podrappa thaa sambabdhame illama 10 12 uh mark yedukku theva illama yeduthu thaa ithana problem create pannitangale...but athanala Thane ithana case ivlo delay..illama smootha poyirukkume..ipavu 2013 batch Ku podalina athu neraya perku job kanava poirum...age illatha vangalukku chance kodunga pavam..

   Delete
  3. Appo unga posting la join panunavangala thookittu antha job a ungalukku kelunnga atha vittutu. Ippo vanthu distrub pannathinga

   Delete
  4. 2013Ku oru murai posting potachu illa.athoda antha batchuku meendum postingey kodukakoodathu neeyayapadipartha. Matha exam ellam appadithan naduthuranga .ellorum kalanthu podum pothu weitagela unmaiya baathikka pattavankaluku athiga mark eduthu iruntha definitely kedaikum.silar pandra selfishahla ethanai peruku mana varutham.

   Delete
 13. அட போங்கப்பா மறுபடியும் (பரிசீலனை) மொதல்லேருந்தா.

  ReplyDelete
 14. Mark na yaar athika Marko avangalukku job..andha varusam avlo tha...next year exam yaar athika mark avangalukku job..that will be better..but exam should conduct every year without fail...but ithellam itharku mela...10 years ah inniki naalaiki nu wait pannavangalukku tha theriyum..illiyina innoru exam must..

  ReplyDelete
 15. 2013TeT therchi meendum2017 pass posting eppo ?

  ReplyDelete
 16. Namakulla pesi govt Ku sonna without any delay..and without case posting will be there...govt kitta vitta case tha minjum. Tet pass candidate all should talk together first..

  ReplyDelete
 17. One by one...1st STD. 2nd STD nu tha varanum yedutha udane na college pokanum nu solrappa tha problem varuthu...so yellarum job pokanum...niyayama Yoshisa athika irukira true puriyum atha vittutu court case nu pona..Adutha 10 years nichayam...

  ReplyDelete
  Replies
  1. Apdilam sollathinga tet mark+employment seniority is very best method for all ungalukku mattum poda mudiyathu

   Delete
 18. TET exam NEET exam ponrathu.athu thevaillai.enentral avargal patitha subject la exam kidayathu.physics patichavanukku biologyla qn ketta ithellam waste.weitege vera

  ReplyDelete
 19. Sir we passed 2017 tet. We also completed our CV. We too struggle a lot. Not only 2013, we hope good solution for all tet passed candidates.

  ReplyDelete
 20. ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுக நாளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சரியான நேரத்தில் நடத்தி முடிக்கபடவில்லை.மேலும் சரியான திட்டமிடல் இல்லை.வெய்டேஜ் என்பது நீதிக்கு புறம்பானது. கடந்த பத்து வருடங்களாக ஒழுங்கற்ற பணி நியமனம். வழக்குகளினால் கால தாமதம். இது ஒன்றிய அரசின் சூழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன். அதனால்தான் தற்போது தகுதி தேர்வு சான்றிதழ் பற்றிய அறிவிப்பு விடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும், வேலை வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் உள்ளனர். எனவே சரியான திட்டமிடல் தேவை

  ReplyDelete
 21. Consider senior 50% TEt 50% in BET at the same time kindly follow the exam patten as PG assitan exam type in TET its imposiple don't contudt TET give Employment seniorty +periorty Basic

  ReplyDelete
 22. 2012 tet exam 89 மதிப்பெண்.. தேர்ச்சி சான்றிதழ் பெறவில்லை.. என்னிடம் தற்போது roll no மட்டும் உள்ளது.தேர்ச்சி சான்றிதழ் பெற வாய்ப்பு உள்ளதா?

  ReplyDelete
  Replies
  1. 2012 ல....90 eduthal mattume pass.......2013 ,17,19 la 82 only pass......

   Delete
  2. 2013 ல 83 mark எடுத்துக்கே..பாஸ் மார்க் 90 னு சொல்லி சர்டிபிகேட் தரல.....Oc க்கு 90 மற்றவங்களுக்கு 82 ஆம் அப்புறம் அது என்ன தகுதித்தேர்வு.

   Delete
 23. 2012 இல் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு இருக்கா

  ReplyDelete
  Replies
  1. Luuusa neenga. 12 la pass mark 90

   Delete
  2. Yarupa lusu arasangam appa lusa irunthuchi 2013 ku na 82 ok 2012 keta thappa neenga matum nalla irukkanum mathavanga nasama ponama na 2013 layum selact

   Delete
 24. Special teacher 2017 batch pass pannavàngalukku posting podunge sir

  ReplyDelete
 25. Ayya sengotaiyan appdi than sir 2013 la tet pass pannuna ellarukum nalla kalam vara podhunu solli solliye engala valkai muluka kulanthaigal mittai ku kathu iruntha kathaiya enga valka 8 years odi pochu marriage ana pengal kulanthaikalai vachikite veetu velaikalai pathu ella problems samalichukitu exam ku prepare panrathu evlo kastam nu engaluku than therium ,ayya unga per laye iruku neengalavathu poi solli engala emathama seekrama oru nalla mudiva sollunga sir

  ReplyDelete
  Replies
  1. சரிதான் நீங்கள் சொன்னது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களின் வாழ்க்கை இலவு காத்த கிளிபோல் ஆகிவிட்டது. பள்ளிகள் திறப்பதற்கு முன் ஆசிரியர் நியமனம் எம்முறையில் நடைபெறும் என்று பரிசீலனை செய்து சொல்லிவிடுங்கள் அமைச்சர் அவர்களே.

   Delete
 26. most of the candidates tet passed in 2013 & 2017 both so consider tet pass seniority bcoz of age. pls sir consider our situation nearly 10years no posting முதலில் வருபவர்க்கே முன்னுரிமை அதுவே நியாயம்

  ReplyDelete
 27. 2013..99 Mark.68.23 weightage
  Sc age 30.. pala varusam nonthachu..pala perta soli aathanga pattachu...nengalavathu sonnathu pola seinga sir.. please

  ReplyDelete
 28. 2013 மற்றும் அதற்க்கு மேல் 2 முறை பாஸ் செய்தவர்களுக்கு முன்னுரிமை கெடுக்கவேண்டும

  ReplyDelete
 29. 2013 tet 99 /weightage 65 39 என்ன பன்றது எல்லாம் தலைவிதி.

  ReplyDelete
  Replies
  1. Tet pass+Employment Seniority confirm.so don't worry.

   Delete
  2. Tet pass+Employment Seniority confirm.so don't worry.

   Delete
  3. Tet mark+employment seniority is only best method

   Delete
 30. Sir please cancel age limit.

  ReplyDelete
  Replies
  1. S friend எவ்ளோ நண்பர்கள் பாதிக்க படுவாங்க

   Delete
 31. ஐயா வணக்கம், ஆசிரியர்கள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் எந்த வேலை இருந்தாலும் தரலாம். எந்த வேலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். தயவு செய்து முயற்சி எடுக்கவும். அல்லது அனைத்து ஆசிரியர்களுக்கும் 10 அல்லது 15 ஆயிரம் சம்பளத்தில் பணியமர்த்தினால் கூட நன்கு வேலை செய்வார்கள். அல்லது அனைத்து துறைகளிலும் கொரோனா தடுப்பு பணியையும் மேற்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம். கொரோனா தடுப்பு பணியில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு ஆசிரியரை நியமிக்கலாம். அவர்களுக்கு தனியாக சுத்தம் சுகாதாரம் மாணவர்களிடத்தில் கற்று தர சொல்லலாம். அவர்களுக்கு வேளாண்மை பயிற்சி அளித்து வேளாண்மை ஆசிரியராக பணியமர்த்த லாம் அல்லது நூலக ஆசிரியராகவும் பணியமர்த்தலாம். இனிமேல் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதுபவர்களுக்கு 90 மேல் மதிப்பெண் எடுத்தால் வேலை என அறிவியுங்கள். அப்பொழுது தான் சரியான நடைமுறை இருக்கும்
  நன்றி கண்ணீருடன்

  ReplyDelete
 32. விரைவில் எனும் வார்த்தை சொல்லவில்லையே..

  ReplyDelete
 33. சார் அப்ப நம்ம கழக ஆட்சியில் டாக்டர் கலைஞர் ஐயா முதல்வரா இருந்தபொழுது 2008-2010 பதிவு மூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்க தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் எல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தாயார் நிலையில் அறிவிய்ப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த சூழ்நிலையில் தீடிரென சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நாங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுவிட்டோம் ஐயா எங்களுக்கும் ஆசிரியர் பணி கிடைக்க மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்கள் தான் தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட அனைவரின் சார்பாக தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா

  ReplyDelete
  Replies
  1. சார் தற்போது ஆசிரியர் ஆக வேண்டும் என்றால் கண்டிப்பாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கலைஞர் அய்யாவே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் ஏற்றிருந்தார் ஆனால் எதிர்மறையாக அமைந்தது.ஆடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஒன்றிய அரசு ஏற்படுத்திய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி என்ற சட்டம் உள்ளதால் கண்டிப்பாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.

   Delete
  2. சார் நமது கழக ஆட்சியில் கல்வியே மாநிலப்பட்டியலில் வரப்போகிறது சார் அப்புறம் என்ன பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நிச்சயம் வழி பிறக்கும் வாழ்க்கை கிடைக்கும் அதுதான் நமது மாண்புமிகு தன்னிகரற்ற தமிழகத்தின் தளபதி முதல்வர் அவர்கள் பொறுந்திருந்து பாருங்கள் அனைவரும் நல்லதே நடக்கும்

   Delete
  3. அதைதான் திர்பார்கிறோன்.கல்வி மாநில பட்டியலில் இருந்தால் நல்லது.பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் வரவேண்டும்.

   Delete
 34. No chance Mr. Unknown. Exam pathi pesitu irukum pothu neenga pudhusa seniority kekringa. Vaaipilla.

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் தகுதி தேர்வு+வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு=பணி நியமனம்

   Delete
 35. Ayya engaluku oru vazhi solunga pls

  ReplyDelete
 36. TET pass+ Employment seniority pls consider this. It would be best now I am 36 I got married unable to lead the family.

  ReplyDelete
 37. TET PASS + Employment seniority

  ReplyDelete
 38. Pls give job all tet pass candidates!

  ReplyDelete
 39. Sir... what about 2017 pg chemistry Six marks increasing.. court order..

  ReplyDelete
 40. My age is 48. Enaku vallai kedikuma.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி