TET லிருந்து விலக்கு வேண்டி மனு - ஏற்கனவே பணி நியமனம் பெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2021

TET லிருந்து விலக்கு வேண்டி மனு - ஏற்கனவே பணி நியமனம் பெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

 

அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் கடந்த 20/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் (சுமார் 1500) செய்யப்பட்ட நிரந்தரமாக பணியிட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் TET லிருந்து விலக்கு கோரி கடந்த பத்து வருடங்களாக அரசிடம் பலமுறை அணுகியும் எங்கள் நிலை பற்றிய புரிதலும் வராமல், தீர்வும் செய்யாமல் மிகுந்த சிரமப்பட்டு பணியாற்றி வருகிறோம். தயவுசெய்து எங்களுக்கு நல்ல விடியல் செய்து தர மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐயாவிடம் இந்த மனுவை அனுப்பி பரிந்துரை செய்து உதவுமாறு தங்கள் பாதம் தொட்டு வணங்கி வேண்டுகோள் விடுக்கிறோம்.நன்றி





6 comments:

  1. சரிதான்...
    உங்களுக்கு மூன்று வாய்ப்பு கிடைத்தும் ஏன் தேர்ச்சி பெறவில்லை.
    இவ்வளவுக்கும் நீங்கள் பாடம் நடத்தி கொண்டு இருந்தீர்கள்.
    இதனால் உங்களுக்கு உங்களுடைய சப்ஜெக்ட் நல்ல மனப்பாடம் ஆகி இருக்கும். இருந்தும் நீங்கள் ஏன் தேர்ச்சி பெறவில்லை. உங்களுக்குதான் அரசாணை போன ஆட்சியில வெளியிட்டாங்களே. கஷ்டப்பட்டு தகுதித்தேர்வுல தேர்ச்சி அடைந்த நாங்கதான் கவலை படனும்.

    ReplyDelete
  2. இவங்க சாப்ட்ற சாப்பாட இவங்களால ஏன் சமைக்கக முடியல

    ReplyDelete
  3. இவங்கள tet லிருந்து விலக்கு அளியுங்கள், பாவம் அவங்க மேனேஜ்மென்ட் ஸ்கூல், ஏற்கனவே மேனேஜ்மென்ட் targer இருக்கும், மேலும் மேலும் அவங்களுக்கு மன அழுத்தம் வேண்டாமே please

    ReplyDelete
  4. டெட் எக்ஸாமை ஒழித்துவிட்டு வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் படி ஆசிரியர்களை நியமிக்கவேண்டும், neet எக்ஸாமை ஒழிப்பது போல் tet எக்ஸாமை ஒழித்து பதிவு முப்பின் நியமிக்கவேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி