10, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் ஒலி வடிவில் அகில இந்திய வானொலியில் பாடங்கள் ஒலிபரப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2021

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் ஒலி வடிவில் அகில இந்திய வானொலியில் பாடங்கள் ஒலிபரப்பு!!

 


10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் ஒலி வடிவில் அகில இந்திய வானொலியில் பாடங்கள் ஒலிபரப்பப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டிற்கான பாடங்களும் ஆன்லைன் முறையிலேயே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பொதுத் தேர்வு எழுத உள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்களுகாக இன்று முதல் 31ம் தேதி வரை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.


கிராமப்புறங்களில் இணைய சேவை குறைவாக உள்ள பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஒலி வடிவிலான பாடங்கள் பயனுள்ளளதாக இருக்கும் என பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் வீதம் 4 பிரிவுகளாக 80 நிமிடங்கள் பாடங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது.  முதல் 20 நிமிடம் 10ம் வகுப்பு பாடங்களும் அடுத்ததாக 3 இருபது நிமிடங்களுக்கு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 வெவ்வேறு பாடங்கள் ஒலி வடிவில் ஒலிபரப்பச் செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி