100% ஆசிரியர்கள் பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாக ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வி ஆணையரிடம் புகார். - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 9, 2021

100% ஆசிரியர்கள் பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாக ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வி ஆணையரிடம் புகார்.

கீழ்க்காணும் மிக முக்கியமான பிரச்சனைகளில் தாங்கள் உடனடியாக தங்கள் மேலான கவனத்தையும் , தலையீட்டையும் செலுத்தி அவைகளை உடன் தீர்த்து வைக்குமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.


 1 ) கொரோனாவின் கோரப்பிடிகள் தமிழகத்தை மிகக் கடுமையாக இறுக்கிக்கொண்டிருக்கும் இச்சூழலில் பள்ளிகள் திறப்பதை தமிழக அரசு தள்ளிவைத்துள்ளது . அதற்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


2 ) அதனடிப்படையில் தாங்கள் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் பள்ளியில் மாணவச் செல்வங்களைச் சேர்த்தல் உள்ளிட்ட ஒரு சில நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்காக தலைமையாசிரியர் மற்றும் அவருக்குத் துணைபுரிய ஒரு சில ஆசிரியர்கள் மட்டும் தினமும் சுழற்சி அடிப்படையில் பள்ளிக்கு வந்தால் போதும் . 100 விழுக்காடு ஆசிரியர்களும் பள்ளிக்குத் தினமும் வரவேண்டிய அவசியமில்லை என்பதை தாங்கள் தங்கள் சுற்றறிக்கையின் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளீர்கள் . அதற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


3 ) தங்களின் இந்த மிகச் சரியான ஆணையை கிருஷ்ணகிரி , தர்மபுரி , சேலம் , திருவண்ணாமலை ஆகிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மதிக்க மறுக்கிறார்கள் . உதாசீனப்படுத்தி காற்றில் பறக்க விடு கிறார்கள் . மேலும் மற்ற முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் . ஆகவே , இதில் தாங்கள் உடனடியாக தலையிட்டு சரிசெய்ய கனிவுடன் வேண்டுகிறோம்.


4 ) பட்டதாரி ஆசிரியர்களுக்கு இவ்வாண்டு வழங்கப்படவேண்டிய உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுகளையும் , முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகளையும் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.


5 ) மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதலில் ( Transfer Counseling ) கலந்துகொள்ள இயலாத நிலைமை தொடர்ந்து நீடித்து வருகிறது . இவர்கள் தங்கள் குடும்பங்களை பிரிந்து சென்னைப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர் . மேலும் சமீபத்தில் சில ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தபோது குடும்பத்தார் கூட பார்க்க இயலாத சூழல் ஏற்பட்டது . எனவே நடைபெற உள்ள பொது மாறுதலில் அவர்களும் கலந்தாய்வில் பங்கேற்று அரசுப் பள்ளிகளுக்கு செல்ல ( அலகு விட்டு அலகு மாறி செல்ல ) வாய்ப்பு வழங்கிடுமாறு தங்களை கனிவுடன் வேண்டுகிறோம் . கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு நடத்திடவேண்டும் . அல்லது மனமொத்த மாறுதலில் செல்வதற்கான வழிவகை செய்யுமாறு வேண்டுகிறோம்.


6 ) பள்ளிகள் திறப்பதற்கு முன்பே ஆசிரியர்களுக்கான ஒளிவு மறைவற்ற பொது இடமாறுதல் கலந்தாய்வினை நடத்திடவேண்டுகிறோம். அதேபோல் கடந்த ஆட்சியில் பட்டதாரி ஆசிரியர் உபரி பணி யிடங்களை நிரவல் செய்து மாறுதலில் சென்று தொலைதூரங்களில் பணியாற்றி வருகின்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடைபெற உள்ள மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை ( Preference ) அளித்திட வேண்டுகிறோம் . பொது மாறுதலில் கலந்துகொள்வதற்கு மூன்றாண்டு தேவை என்ற நிபந்தனையையும் அகற்றிட வேண்டுகிறோம் . அதேபோல் வட்டாரவள மையத்தில் பணியாற்றும் ( BRTE ) ஆசிரிய பயிற்றுநர்களை பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல கலந்தாய்வு நடத்திட வழிவகை செய்யவேண்டும் . 7 ) பதவி உயர்வு காரணமாக வேறு பள்ளிகளுக்கு இடமாறுதலில் சென்றவர்கள் , கலந்தாய்வு பொது இடமாறுதலில் கலந்துகொள்ள எவ்வித நிபந்தனையுமில்லாமல் வழிவகை செய்திட வேண்டுகிறோம்.
17 comments:

 1. அரசு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தால் கொரோனா வந்துவிடும் அதனால் அவர்கள் விட்டில் இருந்தே சம்பளம் வாங்கட்டும்

  ReplyDelete
 2. சம்பள சாகாக்கள உயிர் பயம் அதிகம்
  எத்தனையோ ஏழைகள் அடுத்த வேலைக்கு உணவில்லாமல் அல்லல் படுகின்றன.இவர்களில் யாராவது ஒருவர் பாதி சம்பளம் கொரோனா முடியும் வரை வழங்குங்க சொல்வது இல்லை. இது பாவக்காசு எத்தனையோ குடும்பம் வாழ முடியாமல் மாண்டது அதிகம் ஆனால் இவர்களோ சம்பளமும் பென்சனும் கைஏந்தும் சங்க சாகாக்கள்

  ReplyDelete
 3. Police doctors ellam 100 percent varranga avangalukku corono varathu ivangalukku mattum vanthudum makkum

  ReplyDelete
 4. All departments staffs working 100%. Then what for the teachers.

  ReplyDelete
 5. Teacher than da motho varanum avanga than
  Kasu kasu nu alairanga doctor ethanayo per iranthurukanga avanga uyirlam uyir illaya velaiki varati sampalam vangatha poor people ku kuduthuru
  Government Teacher ah irunthu enna than pandrenga school ah moodunatha thavira ketta poramai nu soldranga

  ReplyDelete
 6. Ipdi sampathikara kasu ellam velangathu enga kasu vangitu enga pullaingala private school la setha vachitingale
  Unga teaching mattum than reason

  ReplyDelete
 7. இவங்க சம்பளத்தில பாதியை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் தனியார் ஆசிரியர்களுக்கு குடுக்கலாம்.

  ReplyDelete
 8. சம்பளம் மட்டும் 100 சதவீதம் வேண்டும் ஆனால் பள்ளிக்கு மட்டும் 100 சதவீதம் வேண்டாம்
  முதலில் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைறங்க

  ReplyDelete
 9. உங்களது கோரிக்கையில் இரண்டு மட்டும் மூன்றாவது பத்தியை பார்த்தேன். அருமை... இதே அரசு ஆசிரியர்களை மாற்று பணிக்கு செல்ல சொல்லும் போது முடியாது என்று சொன்னீர்கள். அரசு சொன்ன அனைத்து ஆணைகளையும் மதிக்க வேண்டும்...

  ReplyDelete
 10. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த ஏப்ரல் 2020 மாதத்திலிருந்து நாளது தேதி வரை சம்பளம் இல்லை... ஆனால் பெற்றோர்கள் கட்டும் fees மட்டும் குறையவே இல்லை

  ReplyDelete
 11. Teaching la mattum posting 10 varusama illa karanam useless teachers so closing all the government schools

  ReplyDelete
 12. Enna than pannuvinga exam pass pannita ungaluku valnaal fulla salary kuduthutu velaiki varama saptu tv pathutu thungite irupingla

  ReplyDelete
  Replies
  1. Poda paithikaara thaniyaar palli nirvaakiyaa nee.....

   Delete
  2. Kandipa unna mari seiyatha velaiki kasu vangi thinnutu vetla paduthu thungara all illa da po da

   Delete
 13. Part time teacher vaarangalla appa neengalum vaanga nagama noongu thinganuma unga uier maatum mukkiem yengalukkullam uier ella sambalatha pathiya kuraichu koduththa vankikkuvingala


  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி