100% ஆசிரியர்கள் வருகைக்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு: விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுகிறார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2021

100% ஆசிரியர்கள் வருகைக்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு: விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுகிறார்

 

தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்தாண்டும் 2வது அலையாக தொற்று பரவியதால் இன்னும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை. இருப்பினும் தொற்றின் பாதிப்பு குறையத் ெதாடங்கியதையடுத்து தமிழகத்தில் படிப்படியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த வாரம் முதல்வர் அறிவிப்பின்படி, பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு சுழற்சி முறையில் வந்து தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகளில்  ஈடுபட்டு வந்தனர்.


இதையடுத்து 19ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். தற்போது 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 100 சதவீதம் பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.  மேற்கண்ட வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் பாடக்குறிப்பேடு, செயல்திட்ட குறிப்பேடு, தினமும் எழுதி அதை தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற வேண்டும்.

கல்வி தொலைக்காட்சி கண்காணிப்பு பதிவேடு  தயாரிக்க வேண்டும், கல்வி தொலைக்காட்சி வகுப்புகளில் அளிக்கப்படும் ஒப்படைப்புகளை மாணவர்களுக்கு அனுப்பி எழுத வைத்து, அதை திரும்ப பெற்று மதிப்பீடு செய்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். ஐடெக் கணினிகள் அனைத்தையும் தலைமை ஆசிரியர்கள் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்போது 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் மட்டும்தான் மாணவர்கள் இருப்பார்கள்.

அவர்கள் அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய வகையில் மேற்கண்ட வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 100 சதவீத அளவில் பள்ளிக்கு வந்தால்தான் பாடங்களை மாணவர்களுக்கு முழுமையாக தெரிவிக்க முடியும் என்பதால் அவர்களை முழுமையாக பள்ளிக்கு வரவழைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார்.

16 comments:

  1. மாணவர்களே இல்லாமல் அவங்க எல்லாமே வந்து என்னதான் புடுங்க போறாங்க.

    ReplyDelete
    Replies
    1. நாகரீகமாக வார்த்தைகளை பயன்படுத்துங்கள் நண்பரே. நீங்களும் ஆசிரியர்களால் உருவாக்க பட்டவர் என்பதை மறவாதிர்

      Delete
    2. ஆசிரியர் உருவாக்கப்பட்ட நானே இப்படி பேசுகின்றேன் என்றால், ஆசிரியரே இல்லாத தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களின் நிலைமை என்ன என்பதை வருங்காலத்தை மாணவர்கள் எப்படி பேச வரும் என்று நினைத்துப் பார். மாணவர்கள் இல்லாமல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதும் ஒன்று தான், வராமல் வீட்டிலேயே இருப்பது ஒன்று தான்.

      Delete
  2. தனியார் பள்ளி ஆசிரியர்கள் ...எங்களை எம் பள்ளி தலைமை வேலைக்கு அழைக்குமா ?! என்று.....ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஏன் எங்களை பள்ளிக்கு அழைக்கிறார்கள் என்று..!?!

    ReplyDelete
    Replies
    1. புரியல ஐயா

      Delete
    2. நாங்களும் காத்துகொண்டு இருக்கிறோம் வழக்கமான பள்ளி செயல்பாடுகளுக்கு govt teachers

      Delete
  3. பள்ளிக்கு வரச் சொல்ல முதல்வர்தான் கூற வேண்டுமா????கொடுமை???

    ReplyDelete
  4. நல்ல முடிவு

    ReplyDelete
  5. அதுவும் அரசாணை பிறப்பிக்க வேண்டும்..

    ReplyDelete
  6. என்னது ? வல்லவராயன் நம் மீது போர் தொடுத்து வருகிறாரா?இனி வெள்ளை கொடி காட்டி சரணடைந்தது பள்ளிக்கு வருகிறோம் என்று சொல்ல வேண்டியது தான் .

    ReplyDelete
    Replies
    1. 😃😃😃 சார் ! தாங்கள் சமுக அறிவியல் ஆசிரியரா

      Delete
  7. School ல வந்து online class சாத்தியமே இல்லை. பெரும்பாலான govt school studentsக்கு mobile கிடைப்பதே காலை 8 மணிக்கு முன்பும் மாலை 6 மணிக்கு பின்பும் தான். பகல் வேளையில் அவர்களுக்கு phone கிடைப்பதில்லை. இதில் ஆசிரியர்கள் எப்படி school க்கு வந்து class எடுக்க முடியும்? இப்பொழுதே ஆசிரியர்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரையும் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையும் online class எடுக்கின்றனர். இதில் 100 % ஆசிரியர்களை பள்ளிக்கு வர வைப்பது எந்த வகையில் சேர்ப்பது. இதற்கு பள்ளியை திறப்பதே மேல் அதைத்தான் அனைத்து ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.அவர்களது வேலை காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையாவது முடியும்.

    ReplyDelete
    Replies
    1. Appo unkalukku sampalam niruthunal nanrai irukkum

      Delete
  8. ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து online class எடுப்பது சாத்தியமே இல்லை. Govt school students க்கு mobile கிடைப்பதே காலை 8 மணிக்கு முன்பும் மாலை 6 மணிக்கு பின்பும் தான். இப்பொழுதே இந்த நேரத்தில் தான் இரவு 9 மணி வரை பெரும்பாலான ஆசிரியர்கள் online class எடுக்கின்றனர். இவர்களை 100 % பள்ளிக்கு வர வைப்பது அவர்களது வேலையில் தொய்வை உண்டாக்கும். பகலில் mobile இல்லாத மாணவர்களுக்கு school லில் எப்படி online class எடுப்பது? இதற்கு பள்ளியைத் திறப்பதே மேல். அதைத் தான் அனைத்து ஆசிரியர்களும் எதிர் பார்க்கின்றனர். அவர்களது வேலை நேரமாவது காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலாவது முடியும்

    ReplyDelete
  9. 50 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியர் நினைத்தால் இதை சாத்தியப்படுத்த முடியும்.

    ReplyDelete
  10. தேர்தல் பணி,மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற பணிகளை தவிர வேறு எந்த பணிக்கும் ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது என்று விதி உள்ளது.ஏனெனில் கல்வி பெரிதும் பாதிப்படையக்கூடாது என்பதற்காகத்தான்.கொரானா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது கல்வித்துறைதான்.கிராமப்புறங்களில் வாழும் ஏழை மாணவர்களுக்கு போன் வசதி இல்லை.நெட் வசதி இல்லை.அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்து விரிவான செயல்திட்டம் தயாரிக்க வேண்டும்.ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்றால் அதை பின்பற்றத்தான் போகிறோம்.மாணவச்சமூகம் எக்காரணத்தைக்கொணடும் பாதிப்படையக்கூடாது.ஒரு நாடு கல்வியில் முன்னேற்றம் அடைந்தால்தான் அந்நாடு உண்மையான வளர்ச்சி அடையும்.ஆசிரியர்கள் பெறும் ஊதியத்தை தாண்டி இதை ஒரு சமூக பொருளாதார அடிப்படை பிரச்சினையாக பாருங்கள்.இந்த கொரானாவால் அவரவர் வாழ்க்கைத்தரத்திற்கேற்ப பல பிரச்சனைகள் ஏற்பட்டது என்பதே நிதர்சனமான உண்மை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி