தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்க மாதம்தோறும் ரூபாய் 2000 உதவித்தொகை - kalviseithi

Jul 21, 2021

தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்க மாதம்தோறும் ரூபாய் 2000 உதவித்தொகை

 தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்பு உதவித்தொகையாக மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2020 - 21ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை, முதுஅறிவியல் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


விருப்பமுள்ளவர்கள் தமிழ், வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய்யியல், முதுநிலை நிகழ்த்துக்கலை, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு (தமிழ், வரலாறு), முதுநிலைப் பட்டயம், சான்றிதழ் மற்றும் ஆய்வியல் நிறைஞா் (எம்.ஃபில்) பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.


இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளராகப் பொறுப்பு வகிக்கும் திரு கு.சின்னப்பன் கூறுகையில், “மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஐந்தாண்டு முதுகலைப் படிப்பில் சோ்ந்து படிக்கும் மாணவா்கள், தாங்கள் விரும்பினால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இளநிலைப் பட்டம் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்ப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பயிலும் மாணவா்கள் 20 பேருக்கும் ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் (ஐந்தாண்டு) படிக்கும் மாணவா்கள் 25 பேருக்கும் தமிழக அரசு உதவியுடன் மாதந்தோறும் ரூ.2,000  சிறப்பு உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மதிப்பெண்கள் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்,” எனத் தெரிவித்தார்.


இந்தக் கல்வியாண்டில் இருந்து இணையம் வழியாகவும் மாணவர் சோ்க்கை நடைபெறுகிறது. 


பல்கலைக்கழக இணையத்தளம் (www.tamiluniversity.ac.in) வாயிலாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பலாம். அத்துடன், விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, உரிய விவரங்களைக் குறிப்பிட்டு, அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம் என்று திரு சின்னப்பன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி