2ம் நிலை காவலர் பணியிடங்களுக்கு இன்று முதல் உடல் தகுதி தேர்வு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 26, 2021

2ம் நிலை காவலர் பணியிடங்களுக்கு இன்று முதல் உடல் தகுதி தேர்வு.

 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை என 10,906 பணியிடங்களுக்கான விண்ணப்பம் அறிவிக்கப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் 13ம் தேதி நடைபெற்றது. எழுத்து தேர்வுக்கான முடிவுகள் சீருடை பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து உடல் தகுதி தேர்வு மற்றும் சான்று சாரிபார்ப்பு நடைபெற்ற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக உடல் தகுதி தேர்வு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது.


 இதைதொடர்ந்து உடல் தகுதி தேர்வு இன்று முதல் தமிழகம் முழுவதும் 20 இடங்களில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டுவர வேண்டும்.  இன்று நடைபெறும் தேர்வில், உடல் தகுதி, சான்று சரிபார்ப்பு, உடல் அளவு தேர்வுகள் நடைபெறுகிறது. விண்ணப்பதார்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்று கொண்டு வர வேண்டும்.  எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. 3 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி