அனைத்து வகை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்து கீழ்கண்ட பணிகளை மேற்கொள்ள உத்தரவு - CEO செயல்முறைகள் ( 25 .07.2021 ) - kalviseithi

Jul 26, 2021

அனைத்து வகை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்து கீழ்கண்ட பணிகளை மேற்கொள்ள உத்தரவு - CEO செயல்முறைகள் ( 25 .07.2021 )

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்கள் / பணியாளர்கள் தினசரி பள்ளிக்கு வருகைபுரிந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி கீழ்கண்ட பணிகளை அனைத்து வகை ஆசிரியர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


1. EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்கள் சரியான முறையில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதையும் புதிதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதையும் உறுதிபடுத்தவேண்டும்.


2. விலையில்லா நலத்திட்ட பணிகள் மாணவர்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்தல் வேண்டும்.


3. பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி சார்பான கால அட்டவணையை அனுப்பி பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்பதை உறுதி செய்தல் வேண்டும் . பாடங்களை கல்வி தொலைக்காட்சியில் கவனிக்க தவறி இருப்பின் / மீள பார்த்து தெளிவு பெற ( Kalvi TV.You Tube Link ) ஐ ( Whats App ) ல் தவறாமல் அனுப்பிடவேண்டும்.


4. பள்ளியில் ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்கள் தயாரித்து வாட்ஸ் ஆப் ( Whats App ) குழுவில் அனுப்பி மாணவர்களுக்கு ஒப்படைவு உள்ளிட்ட தொடர் பயிற்சிகள் வழங்கி மதிப்பீட்டிற்கு பயிற்சித்தாள்கள் , வினாக்கள் வழங்கி குறைத்தீர் கற்பித்தல் பணிகள் மூலம் மாணவர்கள் கற்றலை மேம்படுத்தவேண்டும்.


5. ஒவ்வொரு வார இறுதியில் ( வெள்ளிக்கிழமை ) தலைமையாசிரியர் ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி கற்றல் கற்பித்தல் பணிகள் சார்ந்து ஒவ்வொரு ஆசிரியரிடம் முடிக்கப்பட்ட பாடப்பகுதிகள் மாணவர்கள் பங்கேற்பு , மாணவர் கற்றல் அடைவுநிலை குறித்து வகுப்பு / பாடவாரியாக அறிக்கை பெற்று மாணவர்கள் கற்றல் திறன் மேம்பட மேற்கொள்ள உள்ள தொடர் நடவடிக்கை சார்ந்தும் விவரத்தை பெற்று பள்ளிப்பதிவேட்டில் பதிவு செய்து தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டும். 


6. தினசரி இணையவழி கற்றல் , கற்பித்தல் மேற்கொண்ட விவரங்களை ஆசிரியர்கள் ஒரு Work done பதிவேட்டில் பதிவு செய்து வார இறுதியில் தலைமையாசிரியருக்கு முன்னிலைப்படுத்தவேண்டும்.


7. உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தின் ( High tech Lab ) முலமாக tntp / diksha app போன்ற இணையவளங்களில் உள்ள பாடம் சார்ந்த தகவல்கள் பெற ஆய்வகம் செயல்பாட்டில் உள்ளதை தலைமையாசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும். 


8. மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தல் மற்றும் பயிற்சி அளித்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்வதை தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும். 


9. அவ்வப்போது பள்ளி சார்பான பணிகள் மற்றும் பள்ளி முன்னேற்றத்திற்காக செயல்படுத்தவேண்டிய பணிகளில் தலைமையாசிரியருக்கு பிற ஆசிரியர்கள் உதவிடவேண்டும்.


10.மேற்கண்ட பணிகளை கோவிட் 19 தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுத்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மாவட்டக்கல்வி அலுவலர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மேற்கண்ட பணிகளை கண்காணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
7 comments:

 1. Replies
  1. யாரு ?
   வேலை செய்ய சொன்னா மெண்டல் ...
   அப்படினா உங்களுக்கு வேலை கொடுத்த அரசாங்கம் ???

   Delete
 2. கல்வி துறை உயர் அதிகாரிங்க ஆசிரியரை பார்த்து பொறாமை படறாங்க.இது இயற்க்கை ஆசிரியக்கு கொடுத்த விடுமுறை.

  ReplyDelete
  Replies
  1. என்ன பண்றது sir.... அவங்க ego...அதிகார திமிர் .

   Delete
 3. உங்களுக்கு உங்க பெயரையே வெளிக்காட்ட முடியல.. நீங்க பேசுறதல அர்த்தம் இல்லை சகோ..தயவு செய்து சில்லியாகப் பேசாதீர்..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி