விரைவில் கொரோனா 3வது அலை இந்தியாவை தாக்கும் - ஐஎம்ஏ எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 13, 2021

விரைவில் கொரோனா 3வது அலை இந்தியாவை தாக்கும் - ஐஎம்ஏ எச்சரிக்கை

 

கொரோனா 3வது அலை எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், நாடு இப்பொது தான் கொரோனா 2வது அலையின் பேரழிவில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம் காட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளது. தொற்று பாதிப்புகளின் கடந்த கால அனுபவங்கள் சர்வதேச நிலவரங்களின் படி, கொரோனா 3வது அலை என்பது தவிர்க்க முடியாதது.எந்த நேரத்திலும் 3வது அலை இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. சுற்றுலா, யாத்திரை போன்றவை எல்லாம் மக்களுக்கு அவசியம் ஆனது தான். ஆனால் இன்னும் சில மாதங்கள் பொறுத்து இருந்து தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளது.கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாமல் மக்கள் திரள அனுமதி கொடுத்தால், 3வது அலை அதிவேகமாக பரவ காரணம் ஆகிவிடும் என்று எச்சரித்துள்ளது.

1 comment:

  1. Now you are saying exactly but where did you go when two waves attacked

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி