தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மீண்டும் 58-ஆக குறைப்பு? "பாண்ட்" வழங்க ஸ்டாலின் தீவிர யோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2021

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது மீண்டும் 58-ஆக குறைப்பு? "பாண்ட்" வழங்க ஸ்டாலின் தீவிர யோசனை

 

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58ஆக குறைக்கலாம் என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 2 வருடங்கள் அதிகரித்தார். அதாவது 60ஆக உயர்த்தினார்.


இதனால் ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வு பெறும்போது செய்ய வேண்டிய பல செட்டில்மென்ட்கள் தாமதமாகும் என்பது எடப்பாடி பழனிச்சாமி அரசின் திட்டம்.


இளைஞர்களுக்கு வேலை தேவை

தமிழ்நாட்டில் கடும் நிதி நெருக்கடி சூழ்ந்ததால்தான், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக கடந்த எடப்பாடி ஆட்சியில் உயர்த்தப்பட்டது. அதற்கான அரசாணையையும் பிறப்பித்திருந்தனர். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் அரசு துறைகளில் உருவாகவில்லை. இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் புதிய நியமனங்களுக்கும் தடை விழுந்தது.


ஸ்டாலின் விருப்பம்

இந்த நிலையில், தற்போது, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தில் உள்ள முதல்வர் ஸ்டாலின், 60 ஆக உயர்த்தப்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றியமைக்கலாமா ? என்று யோசிப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


3 மாதத்தில் ஓய்வு தரலாமா

குறிப்பாக, 60 வயதாக உயர்த்தப்பட்டதால் கடந்த ஆண்டு ஓய்வு பெற வேண்டிய ஊழியர்கள் 9 மாதங்களாக பணியில் தொடர்கிறார்கள். அவர்களை மேலும் 3 மாதங்கள் பணிபுரிய அனுமதித்துவிட்டு அவர்களை ஓய்வு பெற வைக்கலாம் என்று ஒரு ஆலோசனை நடந்துள்ளது. அப்படி ஓய்வுபெறும் போது அவர்களுக்குரிய ஓய்வூதிய பலன்களை கொடுக்க வேண்டும் ; அதற்கு மிகப்பெரிய அளவிலான தொகை அரசுக்கு தேவை; ஆனால், தற்போதையை நிதி நெருக்கடியில் அது சாத்தியமில்லை என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பாண்ட் கொடுக்கலாமா

இதனை ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அப்போது, ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் இருந்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு பணமாக மாற்றிக்கொள்ளும் வகையில் பாண்ட் (பத்திரங்கள்) கொடுத்து விட்டால் சமாளிக்கலாமே என்பதாக விவாதம் நடந்துள்ளது.


தீவிர ஆலோசனை

அதேநேரம், பாண்ட் கொடுத்தால் அரசு ஊழியர்கள் ஏற்கமாட்டார்கள்; 58 ஆக குறைப்பது சர்ச்சையையே ஏற்படுத்தும் , யாரும் ஏற்க மாட்டார்கள் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், எடப்பாடி அரசு போட்ட அரசாணையை ரத்து செய்ய என்ன வழிகள் இருக்கு ? அதற்கு தோதான நிதியை எந்த வழிகளில் உண்டாக்கலாம் ? என்கிற ஆலோசனை முற்றுபெறவில்லை. இதனை அறிந்து அரசு ஊழியர்கள் அப்-செட்டாகியிருக்கிறார்கள்.

14 comments:

  1. போகும்போது சூனியம் வச்சுட்டு போய்டுச்சா 😄😄😄

    ReplyDelete
  2. 60 வயது பனிக்காலம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்பதே சாலச் சிறந்தது

    ReplyDelete
    Replies
    1. Neeyellam uyiroda iruppinngala first....

      Delete
  3. நல்ல முடிவு. வாழ்க தளபதி.

    ReplyDelete
  4. இதை போன்று வெளியாகும் உத்தேச செய்திகள் எதுவும் நடைமுறைக்கு வருவதே இல்லை...100 முறைக்கு மேலே சிபிஎஸ் ரத்து என்றும் 100 முறைக்கு மேலே ஆசிரியர்கள் நியமனம் என்றும் படித்து புலுத்துவிட்டது....சாரி ...அலுத்துவிட்டது.

    ReplyDelete
  5. மிகச் சரியான முடிவு,60 வயதில் ஓய்வு என்றாலும் அரசால் நிதி நிலைமை சரியாகது.அதற்கு 58 வயது ஓய்வு என்றால் இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தலாம்

    ReplyDelete
  6. 60 வயது அல்லது 30 ஆண்டு பணிக்காலம் பணியாற்றிவர்களை ஓய்வு பெறச்செய்யலாம்.

    ReplyDelete
  7. அரசு மற்றும் கல்வி துறையில் இருக்கும் மூன்றரை லட்சம் காலிப்பணியிடம் நிரப்பப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது . உண்மையிலேயே இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றால் அந்த பணியிடங்களை நிரப்ப லாம் .

    ReplyDelete
    Replies
    1. Avanga 10years(2021-2031) kum serthu solli irukanga;bro

      Delete
  8. ஓய்வு வயது 58 ...
    என்ற முடிவை நீங்கள் அறிவித்தால்... நீங்கள்தான் ஆகச்சிறந்த முதல்வர்...
    இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு காரணமாக ...வரப்பிரசாதமாக அமையும் என்பதால் இந்த முடிவை நான் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  9. Coming week 58 age announcement will come. Settlement amount 25 percent in hand, 75 percent bond. Nearly 10 percent govt staffs will retire with in 3 month. Thank you our CM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி