தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 29, 2021

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு!


மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


அகவிலைப்படி உயர்வு


கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உருவான கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA) தொகை நிறுத்தி வைக்கப்பட்டது. அதாவது கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அகவிலைப்படியை நிறுத்துவதாக மத்திய அரசு தெரிவித்தது.


அந்த வகையில் 3 தவணைகளாக நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி தொகை திரும்ப கொடுக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 3 தவணைகளாக நிறுத்தப்பட்டிருந்ததான அகவிலைப்படி தொகை 28% மாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் கொரோனா பேரலை காரணமாக அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் அகவிலைப்படி (DA) தொகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் அகவிலைப்படி தொகையை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 28% அகவிலைப்படி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் எனவும், இதனால் அரசுக்கு 2,000 கோடி ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. வேலை வாய்ப்பை உருவாக்குங்கள். எந்த அரசும் அதைப்பற்றி சிந்திப்பதில்லை.

    ReplyDelete
  2. What about transfer counselling

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி