ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள்,சான்றிதழ் சரிபார்த்து முடித்து பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு விரைவாகப் பணி வழங்க நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2021

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள்,சான்றிதழ் சரிபார்த்து முடித்து பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு விரைவாகப் பணி வழங்க நடவடிக்கை - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேட்டி!

 

ஜூலை 31-ம் தேதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.


தமிழக முதல்வர் தலைமை ஆசிரியர் போல எங்களிடம் வேலை வாங்குகிறார். நாங்களும் ஆசிரியர்களாகச் சுழன்று வேலை செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.


திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மற்றும் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி சார்பில் கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 09) நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார்.


பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரூ.890 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட தொகுப்பினை சுமார் 200 பேருக்கு வழங்கினார்.


இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:


“கரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்குப் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற உதவிகளை சேவையாகச் செய்து வருபவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.


மாணவர்களுக்குக் கல்வி மிக முக்கியம். தற்போது கரோனாவால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதால், கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால்தான் தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் மட்டும் கட்டணம் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. அதிலும், 40 சதவீதம் கட்டணத்தை மட்டுமே தற்போது வசூலிக்க வேண்டும். பாக்கியுள்ள தொகையைப் பள்ளிகள் திறந்தபிறகு 2 மாதங்கள் கழித்து வசூலிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.


ஆனால், அரசு உத்தரவை மீறி ஒருசில தனியார் பள்ளிகள் 100 சதவீதக் கட்டணமும், சில பள்ளிகள் 75 சதவீதத்தை ஒரே நேரத்தில் கட்ட வேண்டும் எனவும் பெற்றோரை வற்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் இருந்து புகார்களும் வந்துள்ளன. எனவே, அரசு உத்தரவை மீறி கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் குறித்து பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் அளித்தால், சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்கள், அதன் பிறகு 2017-18ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்த்து பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு விரைவாகப் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.


நீட் தேர்வைப் பொறுத்தவரை அரசு ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளது. நீட் மட்டும் அல்ல, எந்த ஒரு நுழைவுத்தேர்வும் தமிழகத்துக்குள் வராமல் இருக்க திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் விரைவில் மேம்படுத்தப்படும். கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் சரிசெய்யப்படும். தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆய்வு நடத்தியுள்ளேன். மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தி அரசுப் பள்ளிகள் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும்.


அதேபோல, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்குக் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், கலை ஆகியவற்றைக் கற்றுத்தர அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிப்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான அரசாணை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முதல்வருடன் கலந்து பேசி அதற்கான அறிவிப்பு வெளியாகும். தமிழக அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறையில் தினந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த அறிக்கையை முதல்வர் அலுவலகத்துக்கு தினமும் சமர்ப்பித்து வருகிறோம்.

தமிழக முதல்வர் தலைமை ஆசிரியர் போல எங்களிடம் வேலை வாங்குகிறார். நாங்களும் ஆசிரியர்களாகச் சுழன்று வேலை செய்து வருகிறோம். தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. கரோனா 3-வது அலை பரவல் குறித்து சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளதால், பள்ளிகள் திறப்பு குறித்து சுகாதாரத்துறையினரின் கருத்துகளுக்கு மதிப்பளித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.


தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலும் இம்மாதம் இறுதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்”.


இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வநாதன் 

72 comments:

 1. அப்படி நடந்தால் எங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஸ்டாலின் ஐயாவை மறக்க மாட்டோம். எங்களின் மகிழ்ச்சி அவரை நீண்ட காலம் வாழச் செய்யும்

  ReplyDelete
  Replies
  1. இதுவும் ' பொய்யா ' மொழியா...?

   Delete
  2. Sengottaiyan madhiri alli vidama irundha sari...

   Delete
  3. நல்லது எந்த முறையை பின்பற்றி பணி இடம் நிறப்படும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் அரசு....

   Delete
 2. Replies
  1. 100℅நிச்சயம் வ௫ம்

   Delete
  2. வாய்ப்பு ௮திகம்

   Delete
  3. Exam ku notification vittachu innuma second list apdi patha 4th list la nan irupen epdiyum next 10 years ku exam theva illai

   Delete
  4. Vanthal ena avarkaluku therium avarkalum study panikedu tha irupanga unnudiya worka parunga

   Delete
  5. Unnoda work ah ne paru ethuku reply pandra ennoda work ah paka enaku theriyum ne solla venam

   Delete
  6. ௮டேய் நோ நேம் பேரும் ஆலையும் மூஞ்சியும் மூட்டு போ

   Delete
  7. Adai unknown naaye ne muditu poda velakenna ne yaru da venna

   Delete
 3. waiting for pg second list...

  ReplyDelete
  Replies
  1. Poi next exam ku prepare pannunga pa...

   Delete
  2. தேர்வு வராது.... இ௫க்கிர வேலை செய்து பிழைத்து கொள்

   Delete
  3. ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும்
   சுமார் 80000 ஆசிரியர்களும்
   தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் கூடுதலாக 5500 பணிவாய்ப்புகள் கிடைக்கும்.

   அரசு பணியில் உள்ள அனைவரும்
   தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.

   குறிப்பாக தற்போது அரசு பணியில் உள்ள பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும்..

   அரசு பணி இனிக்கிறது
   அரசு கல்வி கசக்கிறது என்பது
   அரசு கல்வியை அரசு ஆசிரியர்களே அசிங்கப் படுத்துவதற்கு சமம்.

   நாங்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை
   அரசு பள்ளியில் படித்தால் அசிங்கம்
   அவை தரம் குறைந்தவை என்று
   அரசு ஆசிரியர்களே நினைப்பது
   அவர்கள் அதிக சம்பளத்தை வாங்கிக்கொண்டு
   வகுப்பரையில் என்னத்த கிழிக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது.

   சாதாரண 5000 ரூபாயையும்
   10000 ரூபாயையும் வாங்கிக்கொண்டு
   தனியார் பள்ளி ஆசிரியர் சிறப்பான கற்பித்தலையும்,
   90 சதவிகித 100 சதவிகித தேர்ச்சியையும் அளிக்கிறார்கள் .. ஆனால் அதிக ஊதியம் பெற்று சுகபோகமாக வாழும் அரசு ஆசிரியர்களோ சக ஆசிரியர்கள் சிறந்த கற்பித்தலை அளிப்பார்கள் என்று ஏற்க மறுத்து தம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்...

   இந்த நிலையை மாற்றிட வேண்டுமானால் அரசு ஒரு தீர்மானத்தை
   நிறைவேற்றி அரசு பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் தம் பிள்ளைகளை கட்டாயம் அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.
   அப்போது தான் இனிவரும் காலங்கள் முழுவதும் புதிய ஆசிரியர்களுக்கு பணிவாய்ப்புகள் கிடைக்கும் என்பதையும் தாண்டி, அரசு பள்ளிகள் மீது அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் அரசு பள்ளிகள் அளிக்கும் கல்வி மீது மதிப்பும்
   மரியாதையும் கூடும்.

   மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
   மேற்கூறிய செய்தியில் உள்ள உண்மை தன்மையை ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுத்தால்
   ஆண்டுக்கு ஆண்டு நடைபெறும்
   அரசு பள்ளிகளின் மூடு விழாவிற்கு
   ஒரு முடிவு விழாவையும்
   அரசு பள்ளிகளை காப்பாற்றியதற்காக மிகச்சிறந்த வெற்றி விழாவையும்
   மகிழ்ச்சியோடு நடத்த வழிபிறக்கும்..

   இப்படிக்கு

   சா.இதயராஜா M.A M.A M.ED M.PHIL
   தமிழ் ஆசிரியர்.

   Delete
  4. Arasu palli aasiriyargal mattum thangal pillaigalai serthaal pothuma? Matra arasu athigarigal ooliyargalin pillaigal international palliagalil padikkalaam. Eppadi thaane

   Delete
  5. ஆத்மார்த்தமாக உயிரை கொடுத்து உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் இப்பொது நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையாக உழைக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகமாக தர வேண்டியது அப்பள்ளி மேலாண்மையின் கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்... pls don't compare the govt teachers with private teachers... because the students of private and govt school are totally different...

   Delete
  6. உண்மையான உழைப்புதான் அது தரமானது என்றால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காதது ஏன் உங்கள் உபதேசம் ஏழை பிள்ளைகளுக்கு மட்டும்தான் உங்கள் பிள்ளை களை அரசு பள்ளிகளில் சேர்க்காதவரை நீங்கள் பணத்துக்காக பாடம் நடத்தும் போலி ஆசிரியர்கள் தான்

   Delete
  7. நான் அவர்கள் பெறும் ஊதியம் அதிகம் என்பதற்காக இப்பதிவை
   போடவில்லை..
   அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை மட்டும் ஏன்
   தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்..

   வேறு அரசு பள்ளியில் கூட சேர்க்க வேண்டாம். குறைந்த பட்சம் தன் பள்ளியில் சிறப்பான கற்பித்தல் உள்ளது என்று எண்ணி தான் பணியாற்றும் பள்ளிகளிலாவது தம் பிள்ளைகளை படிக்க வைக்கலாமே?
   இதை எத்தனை பேர் செய்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து ஆதாரத்தோடு வெளியிட்டால் அரசு பள்ளிகளை அரசு ஆசிரியர்கள் எந்த அளவு மதிக்கிறார்கள் என்பதை நாடே உணரும்.

   அரசு பள்ளியில் படிக்க கூடாது
   ஆனால் அரசு வேலை மட்டும் வேண்டும்?
   இதென்ன ஞாயம்?

   நான் அரசு பள்ளி ஆசிரியர்களின் உழைப்பை பற்றியோ ஊதியத்தை பற்றியோ குறைகூறவில்லை.

   அரசு பள்ளிகள் மீது அவர்களின் பார்வையை பற்றித்தான் பேசுகிறேன்.

   அரசு ஆசிரியர்கள்
   தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் ஒரு பிள்ளைக்கு 2000 என்றும் இருவரை சேர்த்தால் 4000 என்றும் அவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் காலம் வரை மாத ஊதியத்தை உயர்த்தி வழங்கப்படும் அறிவித்தால் அவர்களில் எத்தனை பேர் தனியார் பள்ளிகளில் படிக்கும் தம் பிள்ளைகளை முண்டியடித்துக் கொண்டு அரசு பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்று கணக்கிடுங்கள்..

   நான் முன்பு சொன்ன கணக்கெடுப்பையும்
   தற்போது சொன்ன கணக்கெடுப்பையும் ஒப்பிட்டு பாருங்கள்..

   அதையும் நாட்டு மக்களுக்கு அறிவியுங்கள்..

   ப்ரஷர் மாத்திரை எத்தனை பேருக்கு தேவைப்படுகிறதென்று பிறகு பாருங்கள்..


   Delete
 4. Replies
  1. வாய்ப்பில்லை ராஜா...

   Delete
  2. ௨னக்குதான் வாய்ப்பு இல்லை ராஜா

   Delete
  3. உறுதியாக இரண்டாம் பட்டியல் வரும் Notification இல் காட்டப்படாத 2000பணியிடங்கள் உள்ளதற்கான சான்று Rti மூலம் பெறப்பட்டுள்ளது

   Delete
  4. அப்படியா....பதிவிடுங்கள்

   Delete
  5. பொ௫ தம்பி

   Delete
 5. சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு தாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. Budget la announcement varum sir wait pannunga

   Delete
 6. Indha unknown.laam poi rename pannitu vangappa...
  Yar adikaranga, yar adi vangaranganne theriyala....,😀😀😀

  ReplyDelete
 7. We are waiting 8 years please consider our situation

  ReplyDelete
 8. Replies
  1. Unkala maathiri negative psycho irukkura varai naadu urupadaathu... Neeyum vaala maatta aduthavanaiyum vaala vida maatta...

   Delete
  2. Nee than negative psycho
   Irukira unmaya Sonna kovamthan varum

   Delete
  3. Peyar ellathavan kittalaam
   Naan pesurathu ella...
   😄😄😄

   Delete
 9. எப்படியோ அரசு பள்ளியை தரம் உயர்த்துங்கள்

  ReplyDelete
 10. Viraivil 8652 bt, 5096sgt viraivil strongana thagaval.

  ReplyDelete
 11. 2013 இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள்
  நன்றி ஐயா!✨🎉
  நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆசிரியர்கள்
  வாழ்க! வளர்க!

  ReplyDelete
 12. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 13. சொல்வதை செய்யும் அரசாக இருந்தால் நல்லது.அறிக்கை விடும் அரசாக இருந்தால் கஸ்தம்தான்.

  ReplyDelete
 14. செங்கோட்டையன் part-2 ஆக இருப்பாரோ?

  ReplyDelete
 15. Sengottaitaiyan part -2 ??????? Every month there is an announcemwnt

  ReplyDelete
 16. 2017 pass pannia certificate thirumba edukka enna seya vendum.pls sollunga sir

  ReplyDelete
  Replies
  1. 100kku trb name la dd eduthu exam eludhana district ceo office ku request letter with prescribed format la anupunga.

   Delete
 17. Cv முடித்த 2013 teachers all the best

  ReplyDelete
  Replies
  1. 2013, 2017 and 2019 மூணுல இருந்தும் குலுக்கல் தான் dont worry 😄😄😄😄 be happy

   Delete
  2. Unknown நீ என்ன மென்டலா 2017 தேர்வர்களும் CV முடித்துள்ளார்கள்

   Delete
  3. Paper 1 2017 pogavae illa..

   Delete
 18. Replies
  1. வாய்ப்பு இல்லை ராஜா

   Delete
  2. Your marks and communal sir?

   Delete
 19. இது தவறான முடிவு இவங்க ஏன் கடந்த ஆட்சியில் முறையிடல TET தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக Arts subject only because very easy வேதியியல் போன்ற படங்களை நினைத்து பாருங்க எங்க படத்திலிருந்து வெறும் 8 marks asked

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பாடத்தைத் தேர்வு செய்து படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர் நீயும் உனக்குப் பிடித்த சப்ஜெக்ட் ஐ தேர்வு செய்து படித்திருப்பாய் அப்படி இருக்கும் பொழுது உனக்கு ஏன் Arts சப்ஜெக்டை பார்த்து வயிறு எரிகிறது

   Delete
 20. 2013 tet pass certificate edukka villai . Eppadi certificate vangivathu

  ReplyDelete
 21. அரசு பள்ளிகளின் மூடு விழா பற்றியும் அரசு ஆசிரியர்களின் மனநிலை பற்றியும் தான் முன்பு பதிவிட்ட என் பதிவின் நோக்கம்.
  அரசு ஆசிரியர்களே தம் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்காவிட்டால் வேறு யார் சேர்ப்பார்கள் ?
  இதே நிலை தொடர்ந்தால் இன்னும் இருபது ஆண்டுகளில் அரசு பள்ளிகளே இல்லாமல் போய்விடும் .
  நான் அரசு பள்ளி ஆசிரியர்களை தவறாக சித்தரிக்கவில்லை.நானும் ஒரு ஆசிரியர் தான். என் மகனை நான் அரசு பள்ளியில் தான் சேர்த்திருக்கிறேன்.
  என் பதிவுகளில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

  நன்றி.

  ReplyDelete
 22. Ivanga yara solranga PGTRB la pass pani cv attn panavangaliya? Ela paper 1 & 2 pass pani cv attn panavangaliya? Konjam clear ah solunga.

  ReplyDelete
 23. நீங்கள் வேலை போடுங்க போடாம போங்க... எனக்கு கவலை இல்லை.. இந்த அரசு வேலையை நம்பிதான் நாம் வாழனும் னு இல்ல.. திறமையை வளர்த்துக்கொண்டு தனியார் துறையில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுங்கள்... அரசு வேலை வழங்கும் போது பெற்று கொள்ளலாம்.. தேவையில்லாமல் பொது வெளியில் சண்டையிட்டு ஆசிரியர் என்ற கண்ணியத்தை கெடுத்து விடாதீர்கள்...

  ReplyDelete
 24. We are waiting till 60 age with Confedete to posting.

  ReplyDelete
 25. பதிவுமூப்பா அல்லது தேர்வா என்பதே இன்னும் உறுதியாகாத பட்சத்தில் நண்பர்களே நாம் வாதிடுவதில் அர்த்தமில்லை அரசு அறிக்கை விட்டால் தான் தெரியும்

  ReplyDelete
 26. P.E.T second list related new
  Budget la announcement varum sir wait pannunga

  ReplyDelete
 27. so many teachers passed tet 2013 & 2017 both so pls consider us nalla result sollunga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி