பாடப் புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விரும்பி படிக்கும் புத்தகமாக மாற்றப்படும் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 10, 2021

பாடப் புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விரும்பி படிக்கும் புத்தகமாக மாற்றப்படும்


பாடப் புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் படிக்கும் புத்தகமாக மாற்றப்படும் என்று பாடநூல் நிறுவன தலைவர் திண்டுக்கல் லியோனி கூறினார்.


தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு திண்டுக்கல் லியோனி அளித்த பேட்டி வருமாறு:-


தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக என்னை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து இருக்கிறார். 33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த எனக்கு இந்த பதவியை வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.


ஒன்றிய அரசு


மக்களுக்கான பாடத் திட்டத்தை பாடநூல் கழகத்தின் மூலம் உருவாக்கி, கல்வியை சுமையாக நினைக்காமல், பாடப்புத்தகங்களை மகிழ்ச்சி அளிக்கும் புத்தகமாக மாற்றி, சாதாரண குழந்தைகள் அதை விரும்பிப் படிப்பது போல மாற்றி அமைக்க வேண்டும். இதில் பல புதுமைகளைப் படைப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.


மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தொலைக்காட்சி செய்திகளிலும் ஒன்றிய அரசு என்றுதான் செய்தி வாசிக்கப்படுகிறது. எனவே பாடத் திட்டங்களிலும் மத்திய அரசு என்ற பகுதியை மாற்றி, அடுத்த பருவத்திற்கான புத்தகங்களை அச்சிடும்போது ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி அதை நடைமுறைக்குக் கொண்டு வர பாடநூல் நிறுவனம் முழுமையாக பாடுபடும்.


பிரதமர் விமர்சனம்


நான் பெண்களை இழிவாகப் பேசியதாக பிரதமர் உள்பட என்னை மேடைகளில் விமர்சித்தனர். அந்தக் கருத்து நான் பலமுறை தொலைக்காட்சிகளில் பேசிய கருத்துதான்.


ஆனால் அதில் ஒரு பகுதியை மட்டும் எடுத்து, ஏதோ நான் இடுப்பு பற்றி பேசியதாகவும், பெண்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தியது போலவும் ஒரு போலி குற்றச்சாட்டைக் கூறி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.


அன்புமணிக்கு பதில்


பாடநூல் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில், பா.ம.க.வின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் பேசியதையும், அவர் பயன்படுத்திய வார்த்தைகளை பார்க்கும்போதும், முன்னாள் முதல்-அமைச்சரை டயர் நக்கி என்று அவர் கூறியதை சுட்டிக்காட்ட வேண்டும்.


அந்த வார்த்தையைவிட பெரிய அளவில் பெண்களை அவமதிக்கும்படி நான் பேசவில்லை.

2 comments:

 1. ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும்
  சுமார் 80000 ஆசிரியர்களும்
  தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் கூடுதலாக 5500 பணிவாய்ப்புகள் கிடைக்கும்.

  அரசு பணியில் உள்ள அனைவரும்
  தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.

  குறிப்பாக தற்போது அரசு பணியில் உள்ள பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் படிக்க வைக்க வேண்டும்..

  அரசு பணி இனிக்கிறது
  அரசு கல்வி கசக்கிறது என்பது
  அரசு கல்வியை அரசு ஆசிரியர்களே அசிங்கப் படுத்துவதற்கு சமம்.

  நாங்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை
  அரசு பள்ளியில் படித்தால் அசிங்கம்
  அவை தரம் குறைந்தவை என்று
  அரசு ஆசிரியர்களே நினைப்பது
  அவர்கள் அதிக சம்பளத்தை வாங்கிக்கொண்டு
  வகுப்பரையில் என்னத்த கிழிக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது.

  சாதாரண 5000 ரூபாயையும்
  10000 ரூபாயையும் வாங்கிக்கொண்டு
  தனியார் பள்ளி ஆசிரியர் சிறப்பான கற்பித்தலையும்,
  90 சதவிகித 100 சதவிகித தேர்ச்சியையும் அளிக்கிறார்கள் .. ஆனால் அதிக ஊதியம் பெற்று சுகபோகமாக வாழும் அரசு ஆசிரியர்களோ சக ஆசிரியர்கள் சிறந்த கற்பித்தலை அளிப்பார்கள் என்று ஏற்க மறுத்து தம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்...

  இந்த நிலையை மாற்றிட வேண்டுமானால் அரசு ஒரு தீர்மானத்தை
  நிறைவேற்றி அரசு பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் தம் பிள்ளைகளை கட்டாயம் அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.
  அப்போது தான் இனிவரும் காலங்கள் முழுவதும் புதிய ஆசிரியர்களுக்கு பணிவாய்ப்புகள் கிடைக்கும் என்பதையும் தாண்டி, அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் அரசு பள்ளிகள் அளிக்கும் கல்வி மீது மதிப்பும்
  மரியாதையும் கூடும்.

  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
  மேற்கூறிய செய்தியில் உள்ள உண்மை தன்மையை ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுத்தால்
  ஆண்டுக்கு ஆண்டு நடைபெறும்
  அரசு பள்ளிகளின் மூடு விழாவிற்கு
  ஒரு முடிவு விழாவையும்
  அரசு பள்ளிகளை காப்பாற்றியதற்காக மிகச்சிறந்த வெற்றி விழாவையும்
  மகிழ்ச்சியோடு நடத்த வழிபிறக்கும்..

  இப்படிக்கு

  சா.இதயராஜா M.A M.A M.ED M.PHIL
  தமிழ் ஆசிரியர்.

  ReplyDelete
 2. ஏன் ? பாடப்புத்தகங்கள் அனைத்தையும் திராவிட கட்டுக்கதை புத்தகங்களாக மாற்றபோகிறீர்களோ ?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி