பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2021

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

 

தமிழக அரசுக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் சமக்ர சிக்சா (SAMAGRA SHIKSHA) திட்டத்தில் பணியாற்றி வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட முழு நேர தொகுப்பூதியப் பணியாளர்களாகிய நாங்கள் கீழ்க்கண்ட எங்களது கோரிக்கைகளை பணிவுடன் சமர்ப்பிக்கிறோம்.



  தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் (அனைவருக்கும் கல்வி இயக்கம்  மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம்) தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் 1500க்கும் மேற்பட்ட முழு நேர பணியாளர்கள்  (கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர்கள், கணக்காளர்கள், கணினி விவரப்பதிவாளர்கள், கணினி வகைப்படுத்துநர், பொறியாளர்கள், தகவல் நிர்வாக மேலாண்மையாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள்) மாநில ,மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் (2002 முதல் 2015 வரை) பணியமர்த்தப்பட்டு 6 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வரும் எங்களை கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு காலமுறை ஊதியத்திற்கு உட்படுத்தி பணி நிரந்தரம் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் எங்கள் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தி உதவிடவும் தமிழ்நாட்டில் சமூகநீதி காக்கும் அரசு எங்களை கருணை உள்ளங்கொண்டு பணி நிரந்தரம் செய்ய  மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எங்கள கோரிக்கையை கணிவுன் பரிசீலிக்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் முழு நேர தொகுப்பூதிய பணியாளரகளாகிய எங்களுக்கு இதற்கு முந்தைய அரசு எந்தவிதமான தொழிலாளர் பலன்களையும் முறையான ஊதிய உயர்வையும் வழங்கப்படவில்லை ஆதலால் இதுவரை குறைவான ஊதியமே பெற்று வருகிறோம். மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறை  வழங்கும் ஊதியமும் முறையாக வழங்கப்படவில்லை  எனவே மாண்புமிகு ஐயா அவர்கள் எங்களுக்கு கருணை அடிப்படையில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை செய்த கல்வித் தகுதிக்கு ஏற்ப  குறைந்தபட்ச ஊதியம்  வழங்கிட பணிந்து வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். 

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு இதுவரையிலும் எந்தவிதமான மருத்துவக் காப்பீடு, ESI, பெண்களுக்கான மகப்பேறுகால விடுப்பு மற்றும் இதர சமூகநல பாதுகாப்புத் திட்டங்கள் வழங்காதல் தொகுப்பூதிய பணியாளர்கள் ஊதியமில்லா விடுப்பில் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே இத்திட்டத்தில் பணிபுரியும் முழு நேர பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு வசதி மற்றும் இதர சமூக பாதுகாப்பு வசதி வழங்கிட மாண்புமிகு ஐயா அவர்களை பணிந்து வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் பணியாளர்கள் பணிபுரிவதால் அவர்களுக்கான ஊர்திபடி (Conveyance allowance) 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில்  உயர்த்தி வழங்கிட மாண்புமிகு ஐயா அவர்களை பணிந்து வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.   

8 comments:

  1. Tet pass pannavangaluke velai illa, idhula
    neenga veraya

    ReplyDelete
    Replies
    1. Theriyama nee tet pass pannita Ada sammy mudiyula Da Ammu hoi tet kirdhu just eligible test pass pannina job ungauluku nu sonngala lusu pasagala sorry 2013 nirya pass panninga ok elathukum Posting kidikala ok appudi irrukum next tet vatchanga appa enna pannitu irrudhinga neega ellarumay

      Delete
    2. Just eligible டெஸ்டுக்கு 2013இல் எதற்காக 13,000 போஸ்டிங் போட்டாங்க அறிவாளி...

      Delete
  2. Teacher posting ketka villa sir it is office relating accounts manager, accountant, data entry,MIS , Civil engineer and offic assistent by TN ED,Samagra Shikha Consolidated Staffs thanks

    ReplyDelete
  3. எல்லாம் படைஎடுக்கும் இணிமேல்

    ReplyDelete
  4. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி புரியும் ,கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குக ..ஊதியமில்லாமல் கடந்த 5 மாதங்களாக கொரோன காலத்தில் தவிக்கின்றோம் .....

    ReplyDelete
  5. 100 நாள் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்யும் அரசு... 100 பின்பு எல்லா குறைகளையும் நிவர்த்தி செய்வதை ஒன்றிய அரசு தடுக்கிறது... வண்டி போகாத ஊருக்கு டிக்கெட் கொடுப்பாங்க... வாழ்க ஜனநாயகம்...

    ReplyDelete
  6. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி