சுழற்சி முறையில் பள்ளி வருகை- ஜாக்டோ கோரிக்கை ஏற்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 9, 2021

சுழற்சி முறையில் பள்ளி வருகை- ஜாக்டோ கோரிக்கை ஏற்பு

 

ஜாக்டோ - கிருட்டினகிரி

---------------------------------

 சுழற்சி முறையில் பள்ளி வருகை- ஜாக்டோ கோரிக்கை ஏற்பு.


    கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரிய பெருமக்கள் அனைவரும் 100% பள்ளிக்கு வரவேண்டும் என்ற,

 மதிப்புமிகு முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் , வாய்மொழி உத்தரவை, ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, மறுபரிசீலனை செய்ய ஜாக்டோ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், உரிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இத்தகைய சூழலில் ,ஜாக்டோ  சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து  06-07 -21 அன்று, இது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

     அதனைத் தொடர்ந்து

 08.07. 21 அன்று மீண்டும் ஜாக்டோ நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து உரிய நடவடிக்கைக்கு ஆவண செய்ய, கோரிக்கை விடுத்ததன் பேரில் ,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை நேரில் வரவழைத்து ஆலோசனை மேற்கொண்டபின், கல்வித்துறை ஆணையர் அவர்களை ஆலோசித்து விட்டு உரிய அறிவிப்பினை தெரிவிப்பதாக மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறினார்கள். அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து,

 09- 07 -21இன்று , நமது ஜாக்டோ ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளருமான, திரு.மா. கிருட்டினமூர்த்தி அவர்களிடம்      

தொடர்பு கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்ந்த அலுவலர் அவர்கள்  , மதிப்புமிகு ஆணையர் அவர்களின் மறு உத்தரவு வரும் வரை, கிருட்டினகிரி மாவட்டத்தில், அனைத்து ஆசிரியப் பெருமக்களும் சுழற்சி முறையில் ஏற்கனவே இருந்த உத்தரவுப்படி பள்ளிக்கு செல்லலாம்  என, ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது‌ என தெரிவித்துள்ளார்கள்.  

ஜாக்டோ- ஆசிரியர் பெருமக்களின் கோரிக்கை ஏற்று, உடன் நடவடிக்கை மேற்கொண்ட மதிப்புமிகு மாவட்ட ஆட்சியர் அய்யா அவர்களுக்கு ஜாக்டோ சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 நன்றி!

ஜாக்டோ -கிருட்டினகிரி.

8 comments:

 1. எப்படித்தான் உழைக்காமல் பெறும் ஊதியம் செரிக்கிறதோ.....முதலில் 50%வரச்சொன்னதற்கு ஏன் பெரும்பான்மையோர் வரவில்லை.....படித்த இளைஞரகள்கிராமங்களில் மரத்தடியில் கற்பித்தல் செயல் செய்வதைப் பார்த்தேன்...நீங்கள் தெருக்குழந்தைகளுக்குக் கூட கற்பிப்பதில்லை....

  ReplyDelete
 2. அடிமுட்டாள் புண்ணகையே.... என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஏன் நீ வாயை திறந்து காட்டுகிறாய்...இப்படி எவனெவெனையோ பார்த்து வயிறு பொறுமிக்கிட்டே இருந்தால் பீ பி சுகர் வந்து பெறுவாழ்வு வாழ்வாய்..

  ReplyDelete
  Replies
  1. தற்கால ஆசிரியர் சமூதாயம் முன்பு போல் இல்லை. ஒழுக்கங்கெட்ட வாழ்வும் நாகரிகமற்ற வார்த்தைகளும் சமூகப்பற்றும் இல்லாமல் பொருளாதாரம் ஒன்றே குறிக்கோலாகக் கொண்ட ஆசிரியர்கள் தான் மிகுதி.....தனிமனித ஒழுக்கம் இல்லா ஆசிரியர்கள் அதிகரித்து விட்டனர்...சமூகச் சீரழிவுக்கு உங்களைப் போன்றோரும் காரணம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்...

   Delete
  2. ஆசிரிய‌ர்க‌ள் மீது ஏன் இவ்வ‌ள‌வு வ‌ன்ம‌ம் உன‌க்கு?.,.

   Delete
  3. Engaluku mattum illai kasta pattu private school la fee pay pannara ovvoru vetlayum apdi than makkal panathil sampalam ungal pillaigal thaniyar palliyil padika vaipinga

   Delete
  4. Savukadi sound sound vittu pirayojanam illa government teachers ah vangara samplathuku ethayathu panna sollunga kaasu enga vari panam

   Delete
 3. ஆ சிறியர்கள் ...சுழற்சி முறையில் கூட சரிவர வருவதில்லை என புகார்..
  இது உண்மை.. இதை நிவர்த்தி செய்யுமா சங்கம்....
  அதை விடுத்து எதற்கெடுத்தாலும் கொடி தூக்குவது..

  ReplyDelete
  Replies
  1. சுழற்சி முறையில் வந்தால் மயக்கம் வருகிறது...?🤭

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி