தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் நேற்று காணொளி வாயிலாக, நடத்திய கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள். - kalviseithi

Jul 7, 2021

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் நேற்று காணொளி வாயிலாக, நடத்திய கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள்.

🟣 பள்ளி நிர்வாக எல்லைக்கு உட்பட்ட குடியிருப்புகளில் உள்ள மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் முயற்சி எடுக்க வேண்டும்.


 🟣 பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் EMIS  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


🟣 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணையை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் .


🟣 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பினை அனைத்து மாணவர்களும் பார்ப்பதற்கு , 

அனைத்து ஆசிரியர்களும் நடவடிக்கை மேற்கொண்டு,

கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்து அனைத்து மாணவர்களுடனும் ஆசிரியர்கள் தினசரி உரையாட வேண்டும்.  


 🟣 உரையாடிய  விவரத்தினை தினசரி குறிப்பேடுகளில் ஆசிரியர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.


🟣 கல்வி ஒளிபரப்பு குறித்து மாணவர்களுக்கு சிறுசிறு ஒப்படைவு, சிறுசிறு பயிற்சிகளை வழங்கி அதனை ஆசிரியர்கள் இணைய வழியாகவோ அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயிற்சி தாள்களை சரிபார்த்து திருத்தி ,மீள்பயிற்சியும், வலுவூட்டுதல் பயிற்சியும்  வழங்கிட வேண்டும். 


🟣 கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் எந்தவிதமான இடையூறும் இன்றி பேரிடர் காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு, ஆசிரியர்கள் அனைவரும் முன் 

வரவேண்டும்.


🟣 அரசின் அறிவிப்புகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும், 


🟣 மேற்கண்டவாறு  இயக்குனர் அவர்களுடைய அறிவுரைகளை, சுற்றறிக்கை பதிவேட்டில் பதிவு செய்து அனைத்து ஆசிரியரிடமும்  கையொப்பம் பெற்று பராமரிக்க வேண்டும் 


🟣 மேலும், இயக்குனர் அவர்களுடைய  அறிவுரையை முழுமையாக தங்கள் பள்ளியில் கடைப்பிடிப்பதற்கு, நடைமுறைப் படுத்துவதற்கு அனைத்து ஆசிரியர் களும் ,

உடனே தொடர் நடவடிக்கைகள்  மேற்கொள்ள வேண்டுமென  மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி