புதுச்சேரியில் நீட் தேர்வு உண்டு: கல்வி அமைச்சர் உறுதி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 15, 2021

புதுச்சேரியில் நீட் தேர்வு உண்டு: கல்வி அமைச்சர் உறுதி

 

நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு, நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அரசாங்கம், அதனால் இங்கு தேர்வு உண்டு என்று புதுச்சேரி  கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கல்வி அமைச்சராக நமச்சிவாயம் பொறுப்பேற்றுள்ளார். அவர் கல்வித்துறை தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். மேலும் பல்வேறு தரப்பினரும் துறை சார்ந்து பல்வேறு கோரிக்கைகளையும் அளித்தனர். இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.


'' கல்லூரி மாணவர்களுக்கு எந்த முறையில் தேர்வு நடக்க உள்ளது?

அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில்தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களிடம் பேசிவிட்டு, அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஆன்லைனில்தான் தேர்வு நடத்த வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளேன்.

நிர்ணயிக்கப்பட்ட 75 சதவீதத்தை விட தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம்  வசூலிப்பதாகப் பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்துள்ளது அதிகமாக உள்ளதே?

தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் வசூலிப்பதாக அரசிடம் புகார் வந்துள்ளது. இதுதொடர்பாகக் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் நீட் தேர்வு உண்டா?

நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அரசாங்கம். எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் நம்முடைய அரசாங்கத்தை நடத்த முடியும். அதனால் இங்கு தேர்வு உண்டு.

புதுச்சேரியிலுள்ள 21 சொசைட்டி கல்லூரி ஆசிரியர்களுக்கு, ஊழியர்களுக்குக் கடந்த ஆட்சியில் இருந்தே சரியான நேரத்தில் ஊதியம் தருவதில்லையே?

சொசைட்டி கல்லூரி ஆசிரியர்களுக்கு, ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதில் கடந்த ஆட்சியில் இருந்து பிரச்சினை நிலவி வருகிறது. இதுபோல் கடந்த ஆட்சியில் இருந்த பிரச்சினைகள் அனைத்தையும் இந்த அரசில் சரி செய்வோம்''.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம்  தெரிவித்தார்.

1 comment:

  1. இது நல்ல முடிவு மாணவர்களின் மணஉளச்சலுக்கு இணிமேல் வழி இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி