தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2021

தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வழக்கு

 

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களையும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்ததால், ௧௦ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல, பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கும் தேர்வை ரத்து செய்யக்கோரி, கோவை மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்வின் என்பவர் தாக்கல் செய்த மனு:


கடந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அப்போது, தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.ஒரே வகையான பாடத்திட்டத்தை பின்பற்றினாலும், மாணவர்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படுகிறது.எனவே, தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக, அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.இதற்கிடையில், பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த மாணவர் அஜய்தாஸ், மனு தாக்கல் செய்துஉள்ளார்.

1 comment:

  1. தனித்தேர்வர்களுக்கு ஒரு நல்ல வழியை அரசு காட்ட வேண்டும் . மேற்படி படிக்கச் முடியாத நிலை உள்ளது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி