அரசுப்பள்ளிகள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - அமைச்சர் பேட்டி! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 30, 2021

அரசுப்பள்ளிகள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - அமைச்சர் பேட்டி!

 

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை அடுத்த கள்ளபெரம்பூர் செங்கழுநீர் ஏரியை  நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 9வது முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பின்னர் தான் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும். அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

30 comments:

 1. Replies
  1. இந்த ' பொய் 'யா மொழிகளை படித்தவுடன் மறந்து விடவும்.

   Delete
 2. இன்னும் ரெண்டு வருஷம் வேணுமா?

  ReplyDelete
  Replies
  1. முடிவு செய்வார்...

   முடிவு எடுக்கப்படும்...

   உயர்த்தப்படும்...

   முயற்சிக்கப்படும்...

   Delete
 3. July last la Pani marudhalnu sonnaru???

  ReplyDelete
 4. செங்கோட்டையன் பார்ட் 2

  ReplyDelete
  Replies
  1. ஒரு பேட்டியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அண்ணன் என குறிப்பிட்டு பேசினார்.
   எனவே அவருடைய தம்பி அன்பில் மகேஷ் அண்ணனைப் போலவே செயல்படுவார்
   😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

   Delete
  2. முன்னர் பள்ளிதிறந்தவுடன் வேலை இப்போது பணிமாறுதல் முடிந்தவுடன் நாளை என்னபதிலோ

   Delete
 5. பிற்காலத்தில், வரும் சந்ததிகள், ஆசிரியர் பணி மீது நம்பகதன்மையற்ற எண்ணம் கொண்டு வரும் நோக்கில் தான் பள்ளி கல்வித்துறை செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஆசிரியர் இல்லாத சமூகத்தை உருவாக்குகின்றனர். அப்படி பட்ட சமூகம் நன்கு சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு சிறப்பான கல்வி, அனைத்தும் இலவசம், அரசிற்கு பெருமை, அனைத்தும் கிட்ட வேண்டும், ஆனால் ஆசிரியரை ஒதுக்க வேண்டும்.

  ReplyDelete
 6. திமுக ...😄😄😄

  ReplyDelete
 7. 2030 வரை விரைவில் விரைவில் னு சொல்லிகிட்டே இருப்பாங்க போல

  ReplyDelete
 8. 2017 இல் பணியேற்றவர்கள் இன்னும் ஒரு முறை கூட கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை.வெளி மாவட்டங்களில் பணி செய்கின்றனர்

  ReplyDelete
 9. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் வேலை கிடைக்காமல் கிடைத்தவேலையை செய்துகொண்டு நாங்கள் மிகவும் மன வருத்தத்திலும் இருக்கிறோம்.

  ReplyDelete
 10. கடுப்பேத்துறார் மை லார்டு.

  ReplyDelete
 11. நம்பிக்கை கொண்டு செயல்படுங்கள்.எதிர்மறை சிந்தனை ஆபந்தானது.

  ReplyDelete
 12. வடிவேலு சொல்ற மாதிரி பில்டப் பண்றானே தவிர பாம்ப எடுத்து வெளிய உடறானா?னு சொல்லத் தோணுதா....

  ReplyDelete
 13. 2014 (tet)la potta posting....adukku appuram yarum retire agalaiyam ??

  ReplyDelete
 14. இது இன்னும் அடுத்த ஆட்சியில் யாரும் வந்தாலும் இதுதான் என்ன செய்ய பொறோம் தெரியவில்லை

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி