சட்டக் கல்லூரி மாணவர்கள் நேரடியாக தேர்வெழுத வாய்ப்பு: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2021

சட்டக் கல்லூரி மாணவர்கள் நேரடியாக தேர்வெழுத வாய்ப்பு: தமிழ்நாடு சட்டப் பல்கலை. அறிவிப்பு.

 

இணைய வழியில் தேர்வு எழுதஇயலாத சட்டக் கல்லூரி மாணவர்கள் நேரடியாக தேர்வெழுதவும் வாய்ப்பு அளிக்கப்படும் என சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வி.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


தற்போதைய கரோனா சூழலைகருத்தில்கொண்டு சட்டப் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் இணையவழி வாயிலாகஜூலை 19 முதல் நடத்தப்படஉள்ளன. தேர்வுக்கு பதிவுசெய்துள்ள மாணவர்கள் இணையவழியில் தேர்வெழுதலாம்.

பல்வேறு காரணங்களால் இணையவழியில் தேர்வு எழுத இயலாத மாணவர்கள் இயல்புநிலை திரும்பியதும் கல்லூரியில் நேரடியாக தேர்வெழுதும் வாய்ப்பையும் பல்கலைக்கழகம் வழங்குகிறது. அத்தகைய மாணவர்கள் இணையவழி தேர்வுக்கு ஏற்கெனவே கட்டணம் செலுத்திவிட்ட காரணத்தினால் நேரடி தேர்வெழுத எவ்விதமான கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. மாணவர்கள் ஏதாவது ஒரு தேர்வுமுறையில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி