மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகு பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2021

மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகு பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

 

மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வரும் நிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சூழலில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு தளர்வுகள்அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கொரோனா மூன்றாவது அக்டோபர், நவம்பரில் உண்டாகும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பள்ளிகள் திறப்பதில் மேலும் சிக்கல் நீடித்துள்ளது. இந்நிலையில் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது பேசிய அவர் , “தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே பரவலாக மக்கள் கருத்தாக உள்ளது. இந்த கருத்துக்களே அதிகம் வருவதாக ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சரின் முடிவுகளின் அடிப்படையிலேயே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்றின் மூன்றாம் கட்ட அலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

7 comments:

  1. கேளுங்க...................

    ReplyDelete
  2. What about transfer counselling

    ReplyDelete
  3. Whatabouttransfercounselling.

    ReplyDelete
  4. Good times for now so reopen school for higher classes.direct teaching must before 3rd waves(oct&nov).

    ReplyDelete
  5. Sir please reopen public libraries

    ReplyDelete
  6. பள்ளி திறக்க கூடாது. ஆசிரிய ஆசிரியைகள் பாதுகாப்பு முக்கியம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி