மூடும் நிலையில் இருந்த அரசு பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2021

மூடும் நிலையில் இருந்த அரசு பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியர்கள்

சிவகங்கை அருகே சொந்த செலவில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கி மூடும் நிலையில் இருந்த அரசு பள்ளியை ஆசிரியர்கள்  மீட்டெடுத்துள்ளனர்.

சிவகங்கை அருகே வல்லனில் 1972-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பே தனியார் பள்ளி மோகத்தால், இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை சரிந்தது. இதனால் 7 மாணவர்களே இருந்தனர்.

மூடும் நிலையில் இருந்த இப்பள்ளியை கிராம மக்கள் ஒத்துழைப்போடு தலைமை ஆசிரியர் பாமா, ஆசிரியர் மாலா ஆகியோர் மீட்க முடிவு செய்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தங்களது முயற்சியால் எல்கேஜி, யுகேஜி மழலையர் வகுப்புகளைத் தொடங்கினர்.

அங்கு கற்பிக்கும் ஆசிரியருக்கு தங்களது சொந்த பணத்தில் ஊதியம் வழங்கி வருகின்றனர். மேலும் நன்கொடை பெற்று பள்ளிக்குத் தேவையான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், இருக்கைகள், மின்விசிறி போன்ற வசதிகளை ஏற்படுத்தினர்.

இதையடுத்து, படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது வல்லனி, ரோஸ் நகர், அரிய பவன் நகர், போக்குவரத்து நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் படிக்கின்றனர்.

நேற்று 50-வதாக தர்ஷினி என்ற மாணவி ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தார். அச்சிறுமியை தலைமை ஆசிரியர் பாமா, ஆசிரியர் மாலா மற்றும் கிராம மக்கள் சார்பில் எழுத்தாளரும், முன்னாள் மாணவருமான ஈஸ்வரன் பொன்னாடை போர்த்தி, மரக்கன்று கொடுத்து வரவேற்றார்.

மேலும் மழலையர் வகுப்பில் 20-க்கும் மேற்பட்டோர் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. கை காசு போட்டு சேர்த்துதானே ஆக வேண்டும். இல்லையென்றால் அந்த ஆசிரியர்களின் இடமாற்றம் கண்ணில் வந்து போகும்ல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி