திறந்தவெளி பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கோர முடியாது - ஐகோர்ட் அதிரடி உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 28, 2021

திறந்தவெளி பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கோர முடியாது - ஐகோர்ட் அதிரடி உத்தரவு.

திறந்தவெளிப்பல்கலைக் கழக முதுகலைப் பட்டம் அடிப்படையில் , இரண்டாம் நிலை சார் பதி வாளராக பணி நியமனம் பெற்றவர் முதல் நிலைசார் பதிவாளராக பணி உயர்வு கோரிய மனுவை தமிழக அரசு நிராகரித்தது. 


இதை எதிர்த்து , அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , பணி உயர்வு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா , ஆர் . நீலகண்டன் ஆகியோர் அடங்கிய அமர்வில் , விசாரணைக்கு வந்தது.


 தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.நீல கண்டன் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று அண்ணாமலை பல்கலைக்கழக வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.


 எனவே , நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பணி நியமனமோ , பதவி உயர்வோ கோர முடியாது என்று வாதிட்டார். அரசுத் தரப்பின் இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதுடன் , இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக திறந்தவெளிப்பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் பணி உயர்வு கோர முடியாது என்று தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி