CPS ரத்து - 25% பென்சனுடன் பழைய ஓய்வூதியத்திட்டம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு? - kalviseithi

Jul 5, 2021

CPS ரத்து - 25% பென்சனுடன் பழைய ஓய்வூதியத்திட்டம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

 

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக  தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக்கோரி  பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் கோரிக்கைக்கு உரிய மரியாதை வழங்கி நிபுணர் குழு அமைத்தார். அந்தக்குழுவும் காலம்கடத்தும் பணியை மட்டுமே செய்து வந்ததாக விமர்சனமும் எழுந்தது.  

  

அதனைத்தொடர்ந்து வந்த அதிமுக அரசும் சசிகலாவின் ஆசியால் முதல்வரான முன்னாள் முதல்வர் பழனிச்சாமியும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.  அது போதாது என பென்சன் கேட்கிறார்கள் என நாகரிகமற்ற வார்த்தைகளால் காயப்படுத்தியதோடு நடவடிக்கை எடுத்து தேர்தல் யுக்தியாக பொய்ப் பிரச்சாரமாகவும் அதனைப் பயன்படுத்தியது.  


  அப்போதைய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்ததும் அரசூழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.  முக்கியமாக பழைய ஓய்வூதியத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் கூறியிருந்தது. 

   

   கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றிபெற்றது.  அதில் அரசூழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக பேசப்பட்டது. 


    தற்போது  CPS ரத்து குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில்  . தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் தலைமைச்செயலக உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் கிசுகிசுக்கப்பட்ட  தகவல் படி  தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் அதிகாரப்பூர்வமாக நடைபெறுவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. 


      தற்போது நடைமுறையில் உள்ள  பழைய ஓய்வூதிய திட்டத்தில்  பணி ஓய்வுக்குப்பின் இறுதி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது  .


       ஆனால்  தற்போது  ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 25% ஓய்வூதியம் வழங்கவும்.  முன்பணம் பெறும் காலவரம்பை நீட்டிக்கவும்,   அதற்குமுன்  பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த ஒருகுழு  அமைக்கவும் அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது.       


வரும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.

9 comments:

 1. நல்ல செய்தி வாழ்த்துக்கள் 🎍

  ReplyDelete
 2. Good news for teachers but

  ReplyDelete
 3. இதில் திரைமறைவு காவியம் என்ன இருக்கிறது சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். திமுக அவ்வாறு சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் என அரசு ஊழியர்கள் அனைவரும் ஆணித்தரமாக நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. 2080ல் இதேபோல் வாக்குறுதி இருக்கும் காத்திருப்போம் காலம் பதில்சொல்லும் 😣

   Delete
 4. 25% ஓய்வூதியம் மட்டும் தானா????

  ReplyDelete
 5. பென்சன் ஒரு யோசனை:கடைசி சம்பளத்தில்60% பென்சனாக வழங்கி வளர்ஓய்வு(Incement)இல்லாமல் நிலையான ஓய்வு ஊதியம் வழங்கலாம். முதல்வர் யோசிப்பாரா?.

  ReplyDelete
 6. *25% பென்சனா ?*
  *ஏமாறாதீர்*

  *CPS யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை*

  *CPS யை இரத்து செய்வது தொடர்பாக ஸ்ரீதர் தலைமையிலான வல்லுனர் குழு தமிழக அரசிடம் அறிக்கை சமர்பித்து விட்டது*

  *மீண்டும் குழு எதற்கு ?*

  *காலம் கடத்தும் வேலை*

  *25 % பென்சனா ?*

  *CPS ரத்து என்று அறிவித்தால் தானே*
  *25% அல்லது 100 % ஒய்வூதியம் கிடைக்கும் ?*

  *புதிதாக மீண்டும் ஒரு குழு போட்டால்*
  *எப்படி ரத்து செய்ய முடியும் ?*

  *மத்திய அரசில் CPS பணத்தில் 25% அரசு ஊழியருக்கு முன் பணம் வழங்குகிறது*

  *அது போன்று 25% முன்பணம் தமிழக அரசும் வழங்கப் போகிறது என்று சொல்வதற்கு பதில்*

  *25% ஒய்வூதியம் வழங்க போகிறார்கள் என்று வதந்தியை பரப்புவது CPS ஊழியர்களை ஏமாற்றுவதற்கான வேலை*

  *25% முன்பணத்தை ஏற்றுக் கொண்டால்*
  *CPS யை ரத்து செய்ய மாட்டார்கள் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய கசப்பான உண்மை*

  *இது போன்ற அதிகாரபூர்வமற்ற செய்திகளை பரப்புவதன் மூலம்*
  *CPS யை ரத்து செய்யாமல் இருக்க மனதளவில் நம்மை தயார் படுத்த மூளை சலவை செய்யும் வேலை*

  *விழிப்புடன் இருப்போம்*

  *C PS ரத்து செய்வோம்*

  ReplyDelete
 7. இன்னுமா நம்புறாய்ங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி