Flash News : ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகளுக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2021

Flash News : ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகளுக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் _02.08.2021_ முதல் 100% பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்
பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணாக்கர் சேர்க்கைப் பணிகளை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக , ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை மாணவர்கள் பயன்படுத்துவதற்கான அறிவுரைகள் , ஒப்படைப்புகள் வழங்குதல் மற்றும் ஒப்படைப்புகளை மதிப்பீடு செய்து பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

 இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் , பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுடன் , தாமே தன்னார்வத்துடன் தமது பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்திடும் வகையில் Google Meet , Zoom , Teams , Whatsapp , Telegram போன்ற இணைய வழி கற்பித்தல் முறையினை கையாண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும் . இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.

தற்போது மாணவர்கள் சேர்க்கைப் பணி , பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல் , விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல் , பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல் , மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் ( Assignments ) வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 02.08.2021 முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணிபுரிவதற்கு தேவையான அறிவுரைகளை அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும் மாற்றுத்திறனாளிகள் , புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் , இருதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள் , மற்றும் ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் முதலான ஆசிரியர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் , சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே சார்ந்த ஆசிரியர் பள்ளிக்கு தினமும் வருகை புரிவதிலிருந்து விலக்கு அளித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




7 comments:

  1. Don't speak about promotion transfer appointment......

    ReplyDelete
  2. செங்கோட்டையன் பள்ளி கல்வி துறை 2. O

    ReplyDelete
  3. Transfer counselling announcement eppo pannuvanga ?

    ReplyDelete
  4. மிக்க மகிழ்ச்சி....முதலில் Transfer counselling போடுங்க சார் . Long la இருக்குற teachers 4 years ஆகியும் மூவ் பண்ண முடியாம உள்ளோம்.

    ReplyDelete
  5. கல்லூரி பேராசிரியர்களை எப்பொழுது பணிக்கு கூப்பிடுவார்கள் ...........பேராசிரியர்கள் ..............

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி