01.08.2021 நிலவரப் படி முதுகலை ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 6, 2021

01.08.2021 நிலவரப் படி முதுகலை ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2021 நிலவரப் படி முதுகலை ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (மே.நி.க.) செயல்முறைகள்!
ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்தில் 1.8 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் ( PG Staff Fixation ) பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது . இதன் அடிப்படையில் இக்கல்வியாண்டிற்கான ( 2021-2022 ) அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் PG Staff Fixation ) சார்பான பணிகள் கல்வி மேலாண்மை தகவல் முறைமை ( EMIS ) மூலமாக மேற்கொ arar ப்பட இருக்கிறது. எனவே இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் EMIS இணைய தளத்தில் மேற்படி பள்ளிகள் சார்ந்த கீழ்க்குறிப்பிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.


1. மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அனைத்து அரசு / அரசு மாதிரிப்பள்ளிகள் / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 1.8.2021 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையினை வகுப்பு வாரியாகவும் ( Class wise ) மற்றும் தமிழ் வழி ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


2. ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் அனுமதிக்கப்பட்ட ( Sanctioned Post details ) முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பணியிடங்களின் விவரங்களை பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின்படி ( Scale Register ) ஒப்பிட்டு சரிபார்த்து பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு ( Surplus Post without person ) இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு சரண்செய்யப்பட்டிருந்தால் பள்ளியின் அளவுகோல் பதிவேட்டில் ( Scale Register ) சரண்செய்யப்பட்ட பணியிடங்களை நீக்கம் செய்வதுடன் , அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகக் கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது.


3. அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 பணியிடங்கள் சார்பான முழு விவரங்களையும் ( Teacher Profile ) எவருடைய பெயரும் விடுபடாமல் EMIS இணையதளத்தில் உள்ள கலத்தில் 06.08.2021 க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

9 comments:

 1. PG TRB 2021
  ALL SUBJECTS  Live Online COACHING
  And TEST SERIES BATCH

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  For Admission:9976986679, 6380727953
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
  Replies
  1. 1st exam எப்போன்னு confirm பண்ணுங்க.. Fulstop இல்லாம போயிட்டே இருக்கு..

   Delete
 2. Transfer counselling eppo announcement pannuvanga

  ReplyDelete
 3. விரைவில்...2050ஆண்டு தேர்வு வைத்து..2100ஆண்டு பணிநியமனம் செய்யபடும்..

  ReplyDelete
 4. பொது மாறுதல் கவுன்சிலிங் எப்போது நடக்கும்

  ReplyDelete
 5. அரசு உதவி பெறும் பள்ளிகளில் மு.க.ஆ. நியமனம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. சப்ப

  ReplyDelete
 6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் மு.க.ஆ. நியமனம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.

  ReplyDelete
 7. இது வருசா வருசமா நடக்கற கூத்து தான்....
  பதட்ட பட வேணாம்...
  டைம் பாஸ் மிச்சர்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி