அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் 9ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வருகை தர தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2021

அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் 9ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வருகை தர தமிழக அரசு உத்தரவு.

 

தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உயர்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் எடுப்பது என தமிழக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. அதேசமயம் நடப்பு ஆண்டுக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை உள்ளிட்டவையும் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் வருகின்ற 9ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும். அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் 9ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வருகை தர வேண்டும். பேராசிரியர்கள் அனைத்து வேலைநாட்களிலும் கட்டாயம் வருகை தர வேண்டும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்,எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி புரியும் ,கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குக ..ஊதியமில்லாமல் கடந்த 5 மாதங்களாக கொரோன காலத்தில் தவிக்கின்றோம் .....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி