தமிழக அரசுக்கு ஜாக்டோ ஜியோ வைத்துள்ள 14 கோரிக்கைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 11, 2021

தமிழக அரசுக்கு ஜாக்டோ ஜியோ வைத்துள்ள 14 கோரிக்கைகள்!

 


ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகள் :

* 1.4.2003 க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.

* இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக கடந்த செப்டம்பர் 2017 , ஜனவரி 2019 ஆகிய காலங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய வேலைநிறுத்தப் போராட்ட காலங்களை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக , முந்தைய ஆட்சியாளர்களால் பழிவாங்கும் நடவடிக்கையாக பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களை மீண்டும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பணியிடத்திலேயே பணியமர்த்திட வேண்டும்.

* கடந்த ஜாக்டோ - ஜியோ போராட்டக் காலத்தில் , ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்கள் மீது காவல் துறையால் புனையப்பட்ட பொய் வழக்குகள் இதுநாள்வரை இரத்து செய்யப்படாததால் , விருப்ப ஓய்வு மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கு மிகப் பெரும் தடையாக உள்ளது. காவல் துறையால் புனையப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக இரத்து செய்திட வேண்டும். 

* கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் கடந்த அதிமுக அரசு மூன்று தவணை அகவிலைப்படியினை முடக்கியது. தற்போது ஒன்றிய அரசு அதன் ஊழியர்களுக்கு ஜூலை 2021 முதல் 11 விழுக்காடு அகவிலைப்படியினை அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு வழங்கியுள்ள அகவிலைப்படியினை தமிழக அரசு உடனடியாக ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.

*  கொரோனா நோய்த் தொற்றினைக் காரணம் காட்டி , சரண் விடுப்பினையும் கடந்த ஆட்சியாளர்கள் இரத்து செய்துள்ளனர். சரண் விடுப்புச் சலுகையினையும் உடனடியாக வழங்க வேண்டும். 

* இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.

* முதுநிலை ஆசிரியர்கள் , அனைத்து ஆசிரியர்கள் , அரசுப் பணியாளர்கள் , கண்காணிப்பாளர்கள் , தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் , களப் பணியாளர்கள் , பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் , ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். 

* கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு ( CAS ) உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.

* சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு , அங்கன்வாடி , வருவாய் கிராம உதவியாளர்கள் , ஊராட்சி செயலாளர்கள் , ஊர்ப்புற நுாலகர்கள் , MRB செவிலியர்கள் , கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் , தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள் , செவிலியர்கள் , பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.

* 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

*  2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள்முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.

* அரசாணை எண் 56 ல் இளைஞர்களின் வேலைவாய்ப்பினைப் பறிக்கின்ற வகையில் பகுப்பாய்வு குழு அமைக்கப்பட்டு , அக்குழு அரசிடம் அளித்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மேலும் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள் 100 மற்றும் 101 ஐ இரத்து செய்திட வேண்டும். 

* 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை உடனடியாகக் கைவிட்டு , சமூக நீதியினைப் பாதுகாத்திட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* 3500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

* அங்கன்வாடி மையங்களில் LKG / UKG வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை இரத்து செய்ய வேண்டும்.

* பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக பணியேற்கும் அலுவலர் அரசுப் பணியில் ஆசிரியர் / மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / இணை இயக்குநர் ஆகிய நிலைகளில் பணியாற்றி , கல்வித் துறையில் அனுபவ முதிர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இயக்குநராக நியமிக்கும் நடைமுறையானது கடந்த 150 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு , இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே , இதனை மாற்றி மீண்டும் பணிமூப்பு - கல்வித் துறையில் பெற்ற கள அனுபவ அடிப்படையின் வரும் அலுவலரையே பள்ளிக்கல்வி இயக்குநராக பணியமர்த்த வேண்டும்.


Jactto geo Letter to CM - Download here...


29 comments:

 1. இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அல்ல. மாநில அரசில் தன்னுடன் பணியாற்றும் தன்னிலை சக ஊழியர்களிடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.2009 ல் பணியேற்ற மற்றும்TET தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் அதற்கு முன் பணியேற்ற இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படைஊதியத்தில் இருந்து மாறுபடுகிறது. ஒரே பதவிக்கு வேறுபாடான அடிப்படை ஊதியம் களையப்பட வேண்டும்

  ReplyDelete
 2. அது வேணும் இது வேணும் என்று சொல்லும் ஜாக்டோ ஜியோ மாணவர்கள் படிக்காமல் படிப்பறிவு திறன் மிகவும் மிகவும் குறைந்து விட்டது பள்ளிகளை திறக்க முயற்சி எடுங்கள் என்று அறிக்கை விட ஏன் தயங்குகிறது..............

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர்களா பள்ளிகளை மூடி வைத்துள்ளார்கள்.

   Delete
  2. என்ன கேட்டாலும் பதில் வெள்ளை அறிக்கை தான்... கசப்பு மருந்து தான் கிடைக்கும்...

   Delete
 3. அரசினை 56என்றால் என்ன?

  ReplyDelete
 4. Part time teacher pathi oru words kuda use pannala ...enna idhu?

  ReplyDelete
  Replies
  1. உனக்கு உன் பிரச்சனை ...

   Delete
 5. TET 2013, 2017, 2019 MARANTHUTINGA, UNGA PROBLEM UNGALUKU

  ReplyDelete
 6. Entha 14m theava illatha oru aani, Tet, pgtrb pathi pesamatanga

  ReplyDelete
 7. வேலை இல்லாமல் சம்பளம் மட்டும் வாங்குனா இப்படியெல்லாம் யோசிக்க தோனும்.

  ReplyDelete
 8. இவனுங்க புடுங்குர புடுங்குக்கு சம்பளம் சும்மா இருந்தீட்டே பத்தாது?

  ReplyDelete
 9. Unknown
  August 11, 2021 at 8:15 PM
  niraiya school la hm illa
  class eadukka teachers illa
  corona pandemic la niraiya teachers family members ah ilanthutanga
  other district la iruka teachers ellam romba struggle paduranga ithellam intha govt ku mukkiyam illa pola
  ellam vithi......

  ReplyDelete
 10. Part time pathi yaravdhu kavalai padurangala parunga ...kandipa trust irruku job conform agum ...10 years summa I'll pa

  ReplyDelete
 11. Jacto geoக்கு ஒரே ஒரு கோரிக்கை தயவு செய்து சங்கத்த கலைச்சிருங்க . ஏதோ கோடி கணக்கில சம்பளம் வர மாதிரி போறது வறதெல்லாம் பேசுது.

  அப்படியே இந்த kalviseithi websiteஅ தடை பண்ண சொல்லுங்க எந்நேரமும் பரபரப்பாவே ஆசிரியர்கள வச்சிருக்கான்

  ReplyDelete
  Replies
  1. அப்போது தான் அவன் வரவு கணக்கு உயரும். நீ பாக்காம இரு ஐயா... அது அவன் தொழில்...

   Delete
 12. Why Jacto Jio give his letter, retairement age reduce from 60 to 58, and also retairement service 33 years. All are selfish people. In 33 years service they receive huge salary, loose of interest, why govt allow 33 year's more service for grand mother and grandmother father's. It's Old age Home or Govt office? Anybody ready to argue feel free call 8065300993.

  ReplyDelete
 13. What is maximum age for CM AND PM

  ReplyDelete
 14. most of States in India Retirement age is 61

  ReplyDelete
 15. திறமை இருக்கிறவன் சிறு வயதில் வேலைக்கு வருகிறான் . அதனால் அவர்களுக்கு 33 வருட பணி அனுபவங்களுக்கு மேல் வருகிறது . அதில் உனக்கு என்ன பிரச்சினை ?திரு.உதய சந்திரன் அவர்கள் 23 வயதில் IAS தேர்வில் வெற்றி பெற்றதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் .சிறு வயதில் வேலைக்கு வந்தால் அவர்களுடைய service 33 வருடங்களுக்கு அதிகமாக வரும்,பொறாமை படுவது நல்லதல்ல .

  ReplyDelete
 16. Part time teacher nanga ena thappu panninom solunga ...10 years ..plz conform pannuga aya..mudiyula

  ReplyDelete
 17. Inga pesra elarkum oru vela irku ..oru sampalam irku ..but nanga 8 varusama kathutu irkom..pathil theriyama...

  ReplyDelete
  Replies
  1. Part time teacher nanga 10 years irrukom mind it...Tet enpadhu just eligible mattum Tha Tet exam pass panina job nu yaravdhu sonnagala solunga parpom...summa theriyama oru test la pass pannitinga unga alumbu thanga mudiyulada sammy

   Delete
  2. Ada manaketta paithiyamey nee inuma thirudhala corona vandhu ulagamey sethutu iruku ne inuma da fake id la part time tecaher pathi thappa pesitu comment potu Iruka yenda ne part time tecaher illanu therijidhana yelarum reply Panama irukaga Ada managetta korangey yedhuku indha polappu unaku onnu exam pass pannu illaya yedhachu govt place la consolidated salary ku poi 5 varusam kastapatu vela vangu yenda thanda karumandharama ipadi comments podara.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி