தமிழகத்தில் செப். 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை இன்று முக்கிய ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 17, 2021

தமிழகத்தில் செப். 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை இன்று முக்கிய ஆலோசனை!

 

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். சென்னையில் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்துவது , பள்ளிகள் திறப்பு நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை இன்று ஆலோசனை நடத்தி வருகிறது.


செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பஞ்சாப், பீஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனவே செப். 1 முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

10 comments:

  1. After corono has entirely gone you may reopen the school

    ReplyDelete
  2. What about transfer counselling

    ReplyDelete
  3. எல்லாவற்றையும் திறந்தாச்சு. பள்ளிகளை விரைவாக திறந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள்

    ReplyDelete
  4. மறுபடியும் ஆலோசனையா
    நல்லா ஆலோசனை பண்ணுங்க

    ReplyDelete
  5. இன்னுமா ஆலோசனை.....

    ReplyDelete
  6. செங்கோட்டையன் Sir part 2

    ReplyDelete
  7. Adutha vardamavathu transfer counselling nadathuvangala?

    ReplyDelete
  8. காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி