அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2021

அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் பணியிடங்களையும் கருத்தில் கொண்டு பணியாளர் நிர்ணயம் உரிய ஆய்வு அலுவலர்களால் செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டு வருகிறது , அதேபோன்று 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்து உரிய ஆணைகள் வழங்கப்படவேண்டும் . அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்வது சார்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் நெரிமுறைகளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட தெரிவிக்கப்படுகிறது , மேலும் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இப்பணியினை முடித்து உரிய ஆணைகளை வழங்குவதை உறுதி செய்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.





7 comments:

  1. Aided school posting podalama surplus posting than podanum sonnangale அந்த go cancel agiducha பதில் அளிக்க கூறுகிறேன்

    ReplyDelete
  2. பணி நிரவல் முடிந்ததும் , ஆசிரியர்கள் தேவை என்றால் நிரம்பி கொள்ளலாம்

    ReplyDelete
  3. வாய்பில்லை. RMS. நண்பா... நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

    ReplyDelete
  4. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் உள்ளது. October 15 க்குள் பணி நிரவல் செய்து அறிக்கை யை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு 8/11/2021 அன்று விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகு நீதி மன்றத்தின் உத்தரவை பொறுத்து எதிர்பார்க்கலாம்( but இந்த அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செல்ல இருப்பதாக ஒரு தகவல். அப்படி செல்லும் பட்சத்தில் 2 ஆண்டுகள் நாம் அமைதி காப்பது நலம்.இந்த அரசும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்த வில்லை என்பதை நாம் உணர வேண்டும்). காத்திருப்போம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி