கல்விச்செய்தியின் திசை எட்டும் தமிழில் இன்று - புகழ்பெற்ற சூழலியல் ஆசிரியர் திரு. சு. தியோடர் பாஸ்கரன் அவர்களின் தாமரை பூத்த தடாகம்.... - kalviseithi

Aug 28, 2021

கல்விச்செய்தியின் திசை எட்டும் தமிழில் இன்று - புகழ்பெற்ற சூழலியல் ஆசிரியர் திரு. சு. தியோடர் பாஸ்கரன் அவர்களின் தாமரை பூத்த தடாகம்....

 

கல்விச்செய்தியின் திசை எட்டும் தமிழில் இன்று - புகழ்பெற்ற சூழலியல் ஆசிரியர் திரு. சு. தியோடர் பாஸ்கரன் அவர்களின் தாமரை பூத்த தடாகம் கட்டுரை விளக்கம் வீடியோ பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. 

கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து வீடியோ பதிவை காணுங்கள்,  தங்களது மேலான கருத்துகளை பதிவு செய்யுங்கள்.

Thamarai Pootha Thadakam book Review video Link - View here....

தாமரை பூத்த தடாகம் என்பது ஒரு தமிழ் காட்டுயிர்கள் பற்றிய கட்டுரை நூல். இதன் ஆசிரியர் சு. தியோடர் பாஸ்கரன். இந்நூலில் இந்தியச் சூழலில் வாழும் விலங்குகளைப் பற்றியும் அவை வாழும் இடங்கள் பற்றியும் இயற்கையியலில் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் பற்றியும் மொத்தம் 26 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.


தமிழில் சுற்றுச் சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்லாடல் களையும் உருவாக்கியதில் சு.தியோடர் பாஸ்கரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது சூழலியல் நெருக்கடிகள் தொடர்பாக அவர் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் அவை குறித்த அக்கறைகளை பெரிதும் பரவலாக்கி வந்திருக்கின்றன. வன உயிர்கள், அபூர்வ உயிரினங்களின் அழிவு, வனங்கள் மறைந்து போதல், நீர் நிலைகள் மாசுபடுத்தப்படுவது, இயற்கைக்கு எதிராக மனிதர்கள் தொடர்ந்து உருவாக்கும் வாழ்க்கைமுறை என மிக விரிவான தளத்தில் இக்கட்டுரைகள் பேசுகின்றன. தியடோர் பாஸ்கரனின் எழுத்துக்களில் வெளிப்படும் சுயமான பார்வைகளும் அசலான அனுபவங்களும் பெரும் நம்பகத் தன்மையை உருவாக்குவது மட்டுமல்ல, அவை வாசகனின் இதயத்தை நெருங்கித் தொடுகின்றன. இது துறை சார்ந்த எழுத்துகளில் மிக அபூர்வமாக வெளிப்படும் ஓர் இயல்பாகும். இது அவரது சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி


Thamarai Pootha Thadakam book Review video Link - View here....

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி