ஆகஸ்ட் 31 முதல் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட ICT பயிற்சிக்கான ஆசிரியர்கள் பெயர் பட்டியல் அனுப்ப உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2021

ஆகஸ்ட் 31 முதல் நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட ICT பயிற்சிக்கான ஆசிரியர்கள் பெயர் பட்டியல் அனுப்ப உத்தரவு.

ICT Training_Batch-III_Teachers Name List Called - CEO Reg

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , Hi - Tech Lab Usage மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்தாளர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக , முதற் கட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 12.08.2021 முதல் 18.08.2021 வரை 05 நாட்கள் பயிற்சி முடிக்கப்பட்டு , இரண்டாம் கட்ட பயிற்சி ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை 05 நாட்கள் நடைபெற்று வருகிறது. மேற்காண் பயிற்சி அனைத்து நிலை ஆசிரியர்களுக்கு பல கட்டங்களாக வழங்கப்பட உள்ளது. எனவே , மூன்றாம் கட்ட பயிற்சியானது 31.08.2021 முதல் 05 நாட்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் பெறப்பட்ட ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வழங்கப்பட உள்ளது . 


* வட்டார வள மைய ( பொ ) மேற்பார்வையாளர் தங்கள் ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளின் பயிற்சி பெற உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து கீழ்கண்ட Excel படிவத்தில் 26.08.2021 அன்று மாலை 04.00 மணிக்குள் மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது . ( எக்காரணம் கொண்டும் குறு வளமையம் மூலம் மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு அனுப்புதல் கூடாது )

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி