ஒரு ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றாலும் பள்ளியை திறக்க அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 25, 2021

ஒரு ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றாலும் பள்ளியை திறக்க அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கூறியுள்ளது. இந்த மாதத்தில் இறுதிக்குள் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றாலும் பள்ளியை திறக்க அனுமதி இல்லை என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த மாத இறுதிக்குள் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.


தடுப்பூசி போடுவது கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றை ஆகஸ்ட் 27 க்குள் சமர்பிக்க வேண்டு என பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

4 comments:

  1. Hi sir good afternoon, viruthunagar CEO ,pls share GO Reg compulsory take the vaccines for govt employees

    ReplyDelete
  2. ஊசி போட வேண்டாம் என மருத்தவர்களால் அறிவுறுத்தப்பட்ட ஆசிரியர்கள் என்ன செய்வது?

    ReplyDelete
  3. சம்பளம் இல்லை என்று சொல்லு கட்டாயமா போடுவான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி