அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு - தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2021

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு - தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

 

பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை, மீன்வளம் போன்ற தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு - அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.




• கடந்த ஆண்டுகளில் பொறியியல் , வேளாண்மை , கால்நடை , மீன்வளம் , சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால் , அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும் , அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து , உரிய தீர்வுகளை , பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வு பெற்ற மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு . த.முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு , அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது. 


அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று , அதனைச் செயல்படுத்தும் விதமாக , மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப்போன்றே , அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி