75 வது சுதந்திர தின விழா இன்று பள்ளிகளில் கொண்டிடடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்! - kalviseithi

Aug 15, 2021

75 வது சுதந்திர தின விழா இன்று பள்ளிகளில் கொண்டிடடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்!

 


வழிகாட்டு நெறிமுறைகள் : 


1. அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் / அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை . சமூக இடைவெளியியைப் பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும்.


2. அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல் வேண்டும். 


3. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன் களப் பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள் . சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சேவையினைப் பாராட்டும் பொருட்டு அவர்களை மேற்படி விழாவிற்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும்.


4. கொரோணா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணமடைந்த நபர்களையும் மேற்படி விழாவிற்கு அழைக்கலாம். 


குறிப்பு :


 சுதந்திர தின விழாவின் போது , கொரோனா தொற்று பாதுகாப்பு / தடுப்பு நடவடிக்கைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல் , முகக் கவசம் அணிதல் மற்றும் கூட்டங்களைத் தவிர்த்தல் வேண்டும்.


கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வசதி ஏற்படுத்துதல் மற்றும் கோவிட்- 19 சார்பான சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்.


மேலும் தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்களில் ( Plastics ) உள்ள கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of Rag Code of India 2002 - ன் படி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தற்போது கொரோனா வைரஸ் ( Covld -19 ) தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 15.08.2021 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று இந்திய திருநாட்டின் 75 - வது சுதந்திர தின விழாவினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் / வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா பெருந்தொற்று குறித்து அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி சுதந்திர தினவிழவினை கொண்டாடிட கல்வித்துறை உத்தரவு.

1 comment:

  1. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳அனைவருக்கும் இனிய 75வது சுதந்திரதின நல் வாழ்த்துக்கள் வந்தே மாதரம் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி