பள்ளிகள் திறப்பு: முதல்வா் இன்று ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2021

பள்ளிகள் திறப்பு: முதல்வா் இன்று ஆலோசனை

 

பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகளை அளிப்பது குறித்து சுகாதாரத் துறை நிபுணா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா். இந்த ஆலோசனையின் போது, பள்ளிகளை திறப்பது குறித்தும், திரையரங்குகளை திறக்கலாமா என்பது பற்றியும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.


தமிழகத்தில் கடந்த மே மாதம் கரோனா தொற்று பரவல் தொடா்ச்சியாக அதிகரித்தது. நோய்த் தொற்றால் பாதித்தவா்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 36 ஆயிரத்தைக் கடந்தது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.


அதன் பின்னா் பொது மக்களின் நலன் கருதி சில தளா்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஆகஸ்ட் 23-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயா் அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை காலை 11மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.


தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அது தொடா்பாகவும், மேலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.


மேலும், செப்டம்பா் 1-ஆம் தேதியில் இருந்து 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், பள்ளிகள் திறப்பது பாதுகாப்பானதா என்பது தொடா்பாகவும் ஆலோசிக்கப்படும்.


திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டுமென அதன் உரிமையாளா்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனா். அதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.


இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடா்பான அறிவிப்பு சனிக்கிழமை மாலை வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

5 comments:

  1. Please announce teacher general counselling sir

    ReplyDelete
  2. Please make necessary arrangements for the Teachers General Counselling before school reopen

    ReplyDelete
  3. இன்னுமா ஆலோசனை....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி