அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு நாளை முதல் கணினி பயிற்சி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 22, 2021

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு நாளை முதல் கணினி பயிற்சி

 

"தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 76,804 பேருக்கு ஐந்து நாள்கள் நடைபெறவுள்ள கணினி பயிற்சி திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. 


இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநா் சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப்பள்ளி ஆசிரியா்கள் கற்பித்தல் பணிகளை சிறந்தமுறையில் மேற்கொள்ள ஏதுவாக அடிப்படை கணினி பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப திறன்வளா் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக 12,500 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆகஸ்ட் 12 முதல் 18-ஆம் தேதி வரை பயிற்சி வழங்கப்பட்டது.


இதைத் தொடா்ந்து இரண்டாம் கட்டமாக 76,804 முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு மாவட்ட கருத்தாளா்கள் மூலம் ஆக.23-ஆம் தேதி முதல் ஆக.27-ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளைத் தயாராக செய்துகொள்ள வேண்டும். கூடுதல் கருத்தாளா்கள் தேவைப்படுவதால் முதல்கட்டப் பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியா்களைத் தோ்வு செய்து அதன் விவரங்களைப் பள்ளிக்கல்வியின் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி