கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் உதயசூரியன் வடிவில் நினைவிடம் : மாதிரி வடிவத்தை வெளியிட்டது தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 24, 2021

கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் உதயசூரியன் வடிவில் நினைவிடம் : மாதிரி வடிவத்தை வெளியிட்டது தமிழக அரசு

 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் உதயசூரியன் வடிவில் நினைவிடம் கட்டப்படுகிறது. 2.21 ஏக்கரில் கட்டப்படும் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவில் பிரம்மாண்ட தூணும் அமைக்கப்படுவதாக மாதிரி வடிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் 2.23 ஏக்கரில் கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் எனவும், கலைஞரின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமையும் என்றும் இன்று பேரவையில் தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2.21 ஏக்கரில் கட்டப்படும் கருணாநிதி நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உதயசூரியன் வடிவத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படுகிறது. நினைவிடத்தின் முகப்பில் திறந்துள்ள பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது.


திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் உதயசூரியன் வடிவத்தில் கட்டப்பட உள்ளது. பேனாவும் பிரம்மாண்ட தூணாக நிற்கப்போகிறது. கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமையும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் மக்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதியின் நினைவிடங்களுக்கு சென்று வணங்கி விட்டு செல்கின்றனர். மேலும் கலைஞரின் நினைவிடம் அமைப்பதற்கு எதிர்கட்சிகள் வரவேற்பு அளித்தனர்.

6 comments:

 1. nithi illai entru solupavarkal itharkku mattum 39 kodi irukko

  ReplyDelete
 2. இதற்கு மட்டும் நிதி இருக்கின்றது...

  ReplyDelete
 3. அதான அறிவிப்பு வரலியேன்னு நெனச்சேன். இதுல வரேற்பு வேற கூட்டு களவாணிக

  ReplyDelete
 4. Ithu kellam nithi iruku anal velaivaipuku mattum nithi kidayathu padicha ilaynarkala inimalavathu correcta vote podungapa DMK&ADMK waste government

  ReplyDelete
 5. தமிழ் இன தலைவர் t சொல்லாதீங்கடா....
  திராவிட திருட்டு தலைவன் என்று சொல்லுங்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி