அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2021

அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு.

 

அரசு பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையை, மாணவர் விகிதத்துக்கு ஏற்ப கணக்கெடுத்து பட்டியல் அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் பயிற்சிகள் வழங்கவும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தவும், பள்ளி கல்வி இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 


இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக மற்றும் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கண்டறிய, கணக்கெடுப்பு பணிகளை, பள்ளிக்கல்வி துறை துவங்கியுள்ளது. பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குநர் பொன்னையா, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:


அனைத்து அரசு பள்ளிகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை, ஆக., 1ம் தேதி நிலவரப்படி,மாணவர் எண்ணிக்கை விகிதத்தின் படி,கணக்கெடுக்க வேண்டும். வகுப்பு வாரியாகவும்,தமிழ், ஆங்கில வழி மாணவர் எண்ணிக்கையிலும் கணக்கிட வேண்டும். முந்தைய ஆண்டுகளில் உபரியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி கல்வி துறையிடம் ஒப்படைத்திருந்தால், அந்த இடங்களை கணக்கில் எடுக்கக் கூடாது. 


இந்த விபரங்கள் அனைத்தையும், பள்ளி கல்வி துறையில், கல்வி மேலாண்மை, 'டிஜிட்டல்' தளமான, 'எமிஸ்' வழியாக, 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

18 comments:

  1. விரைவாக முடிவெடுங்கள் pls

    ReplyDelete
  2. நடக்கும் என்பார் நடக்காது.........

    ReplyDelete
  3. 🙏👍🙏👍🙏👍🙏🙏👍🙏

    ReplyDelete
  4. எப்போது கவுன்சிலிங் நடத்த போரிங்க

    ReplyDelete
  5. எடப்பாடி போலவே தளபதியார் அவர்களும் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்போவதில்லை

    ReplyDelete
  6. ஆசிரியர் காலிபணியிடம் list எடுக்கறது ரொம்ப கஷ்டமான வேலையோ?ஏழு வருஷமாக TRB ஆல் கணக்கெடுக்க முடியாத அளவுக்கு,அய்யோ பாவம்

    ReplyDelete
  7. We met govt officials, they told we taking vacant list. They are waiting reduce retairement age 60 to 58 and also 33 years service completed are retairement soon. After that nearly 20000 teachers will be appoint soon. It takes within 90 days.

    ReplyDelete
  8. Wait just 3 months for posting, process will start within 2 month.

    ReplyDelete
  9. Dai innum ethana days da ippadia list list innu poochandi kaatuvinga......

    ReplyDelete
    Replies
    1. Entha thevidiya payanda , dai endrathu. Evlov thairiyama mobile number poduren. mariyatha theriyatha dog , nalla family la irunthu vanthu iruntha ippadi pesa mattinga. Or comments forum la eppadi comment pandrathu nu theriyala.

      Delete
  10. All are requested, use decent words with respect. .

    ReplyDelete
  11. All are educated, also all are known bad words. So avoid it

    ReplyDelete
  12. Ipodhaiku posting chance illa adhu DMK va irundhalum sari admk va irundhalum sari

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி