பள்ளி கல்வித்துறைக்கு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை! - kalviseithi

Aug 13, 2021

பள்ளி கல்வித்துறைக்கு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை!

 

* பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விதமாக இந்த வரவு - செலவுத்திட்டத்தில் மொத்தமாக 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* தேசிய அடைவு ஆய்வு கணக்கெடுப்பின்படி , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழ்நாடு கொண்டுவரப்படுவதை அரசு உறுதி செய்யும்.

* அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக்கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் ) Tablet ( 13.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* 2025 - ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும் , எழுதவும் , அடிப்படைக் கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக , அடிப்படை கல்வியறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய ' எண்ணும் எழுத்தும் இயக்கம் ' , 66.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

* அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 114.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும் . மேலும் , 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20.76 கோடி ரூபாயில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கப்படும்.

* அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி , கவின்திறன் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும் நோக்கத்துடன் , மாதிரிப் பள்ளிகள் அமைத்திட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

*  கொரோனா பெருந்தொற்றின் பரவல் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைக் குறைப்பதே இந்த அரசின் உடனடி முன்னுரிமையாக இருக்கும் . பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு விரைவாக செயல்படும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவையான கொரோனா தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் . கற்றலில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வதற்காக பள்ளி நேரங்களை தவிர பள்ளி வளாகங்களுக்கு வெளியே குறைதீர் கற்றல் வழங்குவதற்கான விரிவானத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
26 comments:

 1. நாங்க ரொம்ப நம்பியது வீனா?

  ReplyDelete
 2. first transfer counselling conduct pannunga

  ReplyDelete
 3. நன்றாக ஏமாந்து விட்டீர்கள்
  ஐயோ பாவம்.

  ReplyDelete
 4. கல்விக்கான பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற ஒரு வார்த்தை கூட வரவில்லை.
  ஆனால் உயர்கல்வி அதாவது பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது/ இப்படியே இந்த வருடம் கடந்து விடுமோ அல்லது கல்வி மானியக் கோரிக்கை வருகிற 27-ஆம் தேதி நடக்குமே அதில் ஏதேனும் ஆசிரியர் நியமன அறிவிப்புகள் எதிர்பார்க்கலாமா? ஒண்ணுமே புரியலையே

  ReplyDelete
  Replies
  1. காவல் துறை காலிபாணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பந்தன் ஆள் எடுத்தாங்க இன்னும் போஸ்டிங் பண்ணல அதுக்குள்ளயும் next அறிவிப்பு முடியல ரெண்டு அரசும் போலீஸ் சப்போர்ட் 👍👍👍

   Delete
  2. ஆசிரியர் சமுதாயம் வேஸ்ட்

   Delete
  3. மிகவும் வேதனையை தருகிறது

   Delete
 5. PG TRB 2021
  ALL SUBJECTS  Live Online COACHING
  And TEST SERIES BATCH

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  For Admission:9976986679, 6380727953
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 6. Part time teacher pathi eadhvdhu palese

  ReplyDelete
 7. DMK ku vote potadhu waste naasama ponga

  ReplyDelete
 8. S avnga intha time evlo emaathi kollaiyadicka porangalo a.....

  ReplyDelete
 9. ஸ்டாலின்தான் வாராரு
  விடியல் தர போறாரு
  அது தான் அது தான்
  மக்களோட முடிவு

  ReplyDelete
 10. DMK government waste teacher postku padichavaga valkaiyla vilaydrunga

  ReplyDelete
 11. DMk vote pota enaku idu devaidan

  ReplyDelete
 12. Part time teacher pathi meeting la eadhvdhu soluvary?

  ReplyDelete
  Replies
  1. Part time teachers ellam oru aalaaaaa? Entha exam mm eluthaama ungalukku epadi permanent panrathu....

   Delete
  2. Kumutai adhu fool idhu theriyama nee part time teacher pathi pesuriya nee ennatha kilucha meeri pona Tet la pass panni irrupa ...theriyama pass pannita podhum Da sammy

   Delete
 13. Admk wast dmk tha best nu comment potanga. Last year l lack new student. At present above 2 lack student but no posting. Ithula admk wast dmk best a??????

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி